ஃப்ரிட்ஜில் தர்பூசணியை வைத்து சாப்பிடலாமா? - Minnalseithi

Latest

Search This Blog

Friday, April 25, 2025

ஃப்ரிட்ஜில் தர்பூசணியை வைத்து சாப்பிடலாமா?

 ஃப்ரிட்ஜில் தர்பூசணியை வைத்து சாப்பிடலாமா?


கோடை காலம் தொடங்கிவிட்டது. நீரோட்டமாக இருக்க வேண்டும். உடல் தாகத்தை தணிக்க வேண்டும். உடல் சூட்டை தணிக்க வேண்டும் என்ற காரணங்களுக்காக நாம் பழ வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்வோம். அது தவறில்லை. ஆனால் சில பழ வகைகளை நாம் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது மிகப்பெரிய ஆபத்தை நமக்கு ஏற்படுத்தும்.


நம் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் பிஸ்கெட், சாக்லேட், காய்கறிகள், பால், தயிர் என எதையெல்லாம் வைக்க முடியுமோ அதை எல்லாம் வைத்து விடுகிறோம். அதே போல்

தர்பூசணி பழத்தினை வாங்கி பாதி சாப்பிட்டு மீதி இருப்பதை நாம் ஃபிரிட்ஜில்தான் வைக்கிறோம். அவ்வாறு வைப்பதால் நம் உடலுக்கு எவ்வளவு பெரிய தீங்குகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க இந்த தர்பூசணி மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், தர்பூசணியை வெட்டி ஒரு பகுதியை சாப்பிட்டு விட்டு மீதிப் பகுதியை ஃப்ரிட்ஜில் வைத்து சில மணி நேரங்கள் கழித்து சாப்பிடுவார்கள். இவ்வாறு சாப்பிடுவதால் பல ஆபத்துகள் வருகின்றன. குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் தர்பூசணியின் ஊட்டச்சத்துக்கள் குறைகிறது. இதனால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் தர்பூசணியை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் போது அதில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இது தொற்று அபாயத்தை ஏற்படுத்தும்.


குளிர்ந்த தர்பூசணியில் இருக்கும் பாக்டீரியாக்கள் குடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். வயிறு பிரச்னைகள் மற்றும் செரிமான பிரச்னைகள் ஏற்படும். மேலும், தர்பூசணி மிகவும் குளிர்ச்சி என்பதால் இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால் நமக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல ஆபத்துகள் காத்திருக்கின்றன. ஆகையால் இனி அதை தவிர்த்து விடுங்கள்… அதுவே உங்கள் ஆரோக்கியத்திற்கு அழகு.

No comments:

Post a Comment