உடல் பருமனை குறைக்கும் காய்..!
பொதுவாக பப்பாளி பழத்தைதான் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பப்பாளிக் காயை யாரும் உபயோகிப்பதில்லை. ஆனால் பப்பாளிக் காயில் உள்ள சத்துக்கள் பல வழிகளிலும் நமது உடலை பாதுகாக்கும் கேடயமாக செயல்படும் என்பதை நம்மில் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.சிலருக்கு அளவுக்கு மீறி உடல் எடை அதிகரித்திருக்கும். அவர்கள் சாதாரணமாக நடக்கவும், ஓடவும் முடியாமல் சிரமப்படுவார்கள்.
குறிப்பாக பெண்கள் வீட்டு வேலைகளை செய்யவே கஷ்டப்படுவார்கள். இவர்கள் தங்கள் உடலில் உள்ள தேவையற்ற சதையை குறைத்துக் கொள்வது மிகமிக அவசியம். சதையை சுலபமாகக் கரைத்து, ஸ்லிம்மாக இருக்க பப்பாளிக் காய் நன்கு பயன்படுகிறது. பப்பாளிக்காயை கூட்டு செய்தோ, குழம்பில் போட்டோ சமைத்து, வாரத்திற்கு இருமுறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,
பருமனான உடல் குறைந்து அளவோடு இருக்கும். வீட்டு வேலைகள், நடப்பதில் சிரமம் ஆகியவை இன்றி இருக்கலாம். மேலும் சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்காமல் இருப்பதுண்டு. அவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பப்பாளிக்காயை பருப்பு சேர்த்து கூட்டு செய்து உணவில் சேர்த்துக் கொண்டால் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரக்கும்.பப்பாளிக்காய் உஷ்ணம் கொடுக்கும் பொருள்.
குழந்தைக்கு ஒத்துக் கொள்ளுமா என்று சிலர் யோசிப்பதுண்டு. இது தவறு. குழம்பில் புளியை சேர்த்து செய்து சாப்பிடுவதை விட பப்பாளிக்காய் உஷ்ணம் குறைந்தது. தாராளமாக சேர்த்து சாப்பிடலாம். எந்தவித பாதிப்பும் குழந்தைக்கு ஏற்படாது.ஆகவே, தாய்மார்கள் பப்பாளிக் காயை உணவில் சேர்த்து பலன்கள் பல பெற்று நலமுடன் வாழலாம்.
No comments:
Post a Comment