சுவையான பூண்டு குழம்பு செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, April 13, 2025

சுவையான பூண்டு குழம்பு செய்வது எப்படி?

 சுவையான பூண்டு குழம்பு செய்வது எப்படி?


குழைவான சுடுசாதத்தில் காரசாரமான பூண்டு குழம்பு ஊற்றி சாப்பிட்டால் யாருக்குத்தான் பிடிக்காது சொல்லுங்க... அதுவும் மழைக்காலங்களில். பல மருத்துவ பலன்களை கொண்ட பூண்டு வைத்து செய்யப்படும் இந்த குழம்பு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மேலும் இருமல், சளி தொல்லையில் இருந்து இது தீர்வு அளிப்பதாக கூறப்படுகிறது.


பொதுவாக பூண்டு குழம்பை சின்ன வெங்காயம், தக்காளி, மிளகு சேர்த்து செய்வது வழக்கம். ஆனால் இன்று இங்கே நாம் பார்க்கப்போகும் இந்த ரெசிபியில் பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை அரைத்து கலந்து எப்படி காரசாரமான பூண்டு குழம்பு வைக்கலாம் என்று தான்.


இந்த அரைத்து வைத்த பூண்டு குழம்பை நீங்கள் சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.


தேவையான பொருட்கள் :


அரைக்க தேவையானவை :


சின்ன வெங்காயம் - 6


தக்காளி - 1


பூண்டு - 10 பல்


சீரகம் - டீஸ்பூன்


மிளகு - 1 டீஸ்பூன்


வெந்தயம் - 1/4 டீஸ்பூன்


எண்ணெய் - 1 டீஸ்பூன்


கறிவேப்பிலை - சிறிதளவு


உப்பு - சுவைக்கேற்ப


செய்முறை :


முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் ஒரு கைப்பிடி அளவு பூண்டு, சீரகம், கருப்பு மிளகு, வெந்தயம், சின்ன வெங்காயம் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.


வெங்காயம் மற்றும் பூண்டு முழுமையாக வதங்கியவுடன் அடுப்பை அணைத்து அவற்றை நன்றாக ஆறவிடவும்.


வதக்கி வைத்துள்ளவை ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக மசிய அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.


அடுத்து அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து பெரித்து கொள்ளுங்கள்.


பிறகு அதனுடன் இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.


வெங்காயம் சிறிது வதங்கியவுடன் பூண்டு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.


வெங்காயம் நிறம் மாறி கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.


மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பேஸ்டை அதில் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.


குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும் தருவாயில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.


தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.


பிறகு அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து கலந்து மூடி வைத்து மிதமான தீயில் சமைக்கவும்.


குழம்பில் எண்ணெய் பிரிந்து ஓரளவிற்கு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து கொள்ளுங்கள்.


அவ்வளவு தான் சுவைமிகுந்த காரசாரமான அரைத்து வைத்த பூண்டு குழம்பு ரெடி...

No comments:

Post a Comment