மாதம் ரூ 30,000 ஊதியத்தில் 80 பணியிடங்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு..!
மத்திய அரசுக்கு சொந்தமான சென்னை ஆவடி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 80 ஜூனியர் டெக்னிஷியன் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, கல்வித் தகுதி என்ன போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. ஆவடி கனரக என்ஜின் தொழிற்சால என அழைக்கப்படும் இந்த நிறுவனம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஆவடி என்ஜின் தொழிற்சாலையில் 80 ஜூனியர் டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. ஜூனியர் மேனேஜர் (உற்பத்தி) - 02
2. ஜூனியர் மேனேஜர் (தரம்) - 03
3. ஜூனியர் மேனேஜர் (வடிவமைப்பு) - 01
4. ஜூனியர் மேனேஜர் (மனிதவளம்) - 01
5. ஜூனியர் மேனேஜர் (பாதுகாப்பு) - 01
6. ஜூனியர் மேனேஜர் (நிதி மற்றும் கணக்குகள்) - 01
7. ஜூனியர் மேனேஜர் (சந்தைப்படுத்தல் & ஏற்றுமதி) - 01
8. ஜூனியர் டெக்னீஷியன் (ஃபிட்டர் ஜெனரல்) - 58
9. ஜூனியர் டெக்னீஷியன் (இயந்திர நிபுணர்) - 11
10. ஜூனியர் டெக்னீஷியன் (வெல்டர்) - 01
கல்வித் தகுதி:
பணியிடத்திற்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். ஐடிஐ, பி இ/பிடெக், எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி அனுபவமும் அவசியம். ஜூனியர் மேனேஜர் (மனித வளம்) பணிக்கு எம்.பி.ஏ/ முதுகலை பட்டம்/ பெர்சனல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலம. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு & சம்பளம்
18-வயது நிரம்பியவர்களும் 28 வயதுக்கு உட்பட்டவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். ஜூனியர் டெக்னிஷியன் பணிக்கு ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
எக்ஸாம் எதுவும் கிடையாது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு / திறன் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்டி மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 25.04.2025 கடைசி நாளாகும்.
முழு விவரங்களுக்கு
https://avnl.co.in/files/careers-vacancies-document/Fixed_Tenure_Detailed_Advertisement_EFA_22-03-2025.pdf
No comments:
Post a Comment