பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் 231 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, April 16, 2025

பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் 231 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் 231 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 231 சமையல் உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.


ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மாநகராட்சி கோட்ட அலுவலகங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ள சமையல் உதவியாளர்கள் பணியிடங்கள் எண்ணிக்கை இன சுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம்.


சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளராக தொகுப்பு ஊதியத்தில் பணியமனம் செய்யப்படுவோருக்கு ஓராண்டு கால பணிக்கு பின் சிறப்பு கால முறை ஊதியத்தில் ஊதிய நிலை ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது முதல் 40 வயது வரை, பொது பழங்குடியினர் 18 வயது முதல் 40 வயது வரை, விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் 20 வயது முதல் 40 வயது வரை உடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.


வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். குறைந்தபட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழ் சரளமாக எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். நியமனம் கோரும் மையத்திற்கு விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் மூன்று கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும்.


காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் 16.4.2025 முதல் 30.4. 2025 வரை அனைத்து வேலை நாட்களிலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ் எஸ்எஸ்எல்சி மதிப்பு சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிட சான்று, ஆதார் அட்டை, சாதி சான்று போன்றவற்ற நகல் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களையும் நகல்களையும் இணைக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.


விண்ணப்ப படிவத்தை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மாநகராட்சி கோட்ட அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விண்ணப்ப படிவத்தை திருச்சிராப்பள்ளி மாவட்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் மா. பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment