சென்னை ஐஐடி-யில் உள்ள 10 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, April 6, 2025

சென்னை ஐஐடி-யில் உள்ள 10 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..!

 சென்னை ஐஐடி-யில் உள்ள 10 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..!


சென்னை ஐஐடியில் இயங்கும் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகம் (IC&SR)கீழ் காலியாக உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 10 காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி-யில் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகம் (IC&SR)கீழ் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


டிகிரி முடித்து வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.


பணியின் விவரங்கள்



ஜூனியர் நிர்வாகி 10


வயது வரம்பு


சென்னை ஐஐடி-யில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினர் அதிகபடியாக 30 வரை இருக்கலாம். பொதுப் பிரிவினர்கள் அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம்.


கல்வித்தகுதி


இப்பணியிடங்களுக்கு கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் 3 வருட இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இளங்கலை படிப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள், பொதுப் பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். Ms Word, Ms Excel, Ms PowerPoint ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.


சம்பள விவரம்


ஜூனியர் நிர்வாகி பதவிகளுக்கு மாதம் ரூ.18,000 சம்பளமாக வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வு/ நேர்காணல் ஆகியவற்றுக்கு அனுமதிக்கப்படுவார்கள். நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்


 https://careers.icsr.in/


 என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதார்கள் அவர்களுடைய Resume, புகைப்படம், கல்வித்தகுதி சான்றிதழ்கள், வகுப்பு சான்றிதழ்கள் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்


21.04.2025


சென்னை ஐஐடி-யில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணபிக்கலாம்.

 விண்ணப்பிக்கும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், 


 icsrrecruitment@icsrpis.iitm.ac.in / 


மற்றும்


icsrrecruitment6@icsrpis.iitm.ac.in 


என்ற இமெயில் முகவரி, 044- 2257 9796 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment