சுவையான வாழைப்பூ பிரியாணி செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, March 18, 2025

சுவையான வாழைப்பூ பிரியாணி செய்வது எப்படி?

 சுவையான வாழைப்பூ பிரியாணி   செய்வது எப்படி?



தேவையான பொருட்கள்


1வாழைப்பூ - (சிறியது)


2 கப் - சீரகசம்பா அரிசி


5-பட்டை, கிராம்பு


2 - ஏலக்காய்


1- பிரிஞ்சி இலை


2 - பெரிய வெங்காயம்


1 -தக்காளி


3 - பச்சைமிளகாய்


5 டீஸ்பூன்

 -இஞ்சி-பூண்டு விழுது


1 1/2 டீஸ்பூன் - மிளகாய்த்தூள்


1 1/2 டீஸ்பூன் - கரம் மசாலாத்தூள்


தேவையான அளவு உப்பு -


தேவையானஅளவு - புதினா, கொத்தமல்லித்தழை இலை


3 டீஸ்பூன் - எண்ணெய்


4 டீஸ்பூன் - நெய்


1/2 - எலுமிச்சைப்பழம்


1/2 கப் - தயிர்


50 கிராம் - காரட்


50 கிராம் - பீன்ஸ்


அரைக்க:


200 கிராம் - சின்ன வெங்காயம்


1 1/2 டீஸ்பூன் - சோம்பு


3 டீஸ்பூன் - கொத்தமல்லித்தழை


2 டீஸ்பூன் -புதினா


சமையல் குறிப்புகள்



முதலில் பச்சைமிளகாய், தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து வைக்கவும்.அரைக்க கொடுக்கப்பபட்டுள்ள பொருட்களை அரைத்து தனியாக எடுத்து கொள்ளவும்.




.சீரக சம்பா அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாழைப்பூவை நரம்பு நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.




குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் வதக்கவும்.




இத்துடன் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை போக வதக்கவும்.




பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் தயிர், அரைத்த பேஸ்ட், சேர்த்து நன்கு வதக்கவும்.




அடுத்து அதில் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, புதினா இலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கியதும், வாழைப்பூ சேர்த்து வதக்கவும்.




இப்போது அரிசி சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு முக்கால் பதம் வேகும் வரை சாதாரண மூடியால் குக்கரை மூடவும்.



சிறிது நேரத்திற்கு பின் மூடியை திறந்து அரிசியைக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும் நெய் ஊற்றி மெதுவாக கிளறிவிட்டு, எலுமிச்சைச் சாறு ஊற்றி மூடியை வைத்து மூடி, வெயிட் போட்டு தீயைக் குறைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பின்னர் பரிமாறவும். சுவையான வாழைப்பூ பிரியாணி தயார்.

No comments:

Post a Comment