BHEL நிறுவனத்தில் 33 பணியிடங்களுக்கு ரூ 45,000 மற்றும் ரூ 85,000 ஊதியங்களில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின் பெங்களூர் கிளையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெங்களூரில் உள்ள திட்ட இன்ஜினியர் மற்றும் திட்ட மேற்பார்வையாளர் ஆகிய பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மொத்தம் 33 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின் (BHEL) பெங்களூர் பிரிவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
திட்ட இன்ஜினியர் மற்றும் திட்ட மேற்பார்வையாளர் என மொத்தம் 33 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர்
திட்ட இன்ஜினியர் (Project Engineer)- 17
திட்ட மேற்பார்வையாளர் (Project Supervisor) -16
மொத்தம் -33
இதில் பொதுப் பிரிவில் -15, பொருளாதாரத்தில் பின்தங்கியவர் - 2, ஒபிசி பிரிவில் - 6, எஸ்சி - 5, எஸ்டி - 5 என மொத்தம் 33 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு 01.03.2025 தேதியின்படி, அதிகபடியாக 32 வயது வரை இருக்கலாம்.
இதில் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளுக்கு, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி
திட்ட இன்ஜினியர் மற்றும் திட்ட மேற்பார்வையாளர் ஆகிய பதவிக்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமெண்டேசன் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.மேலும் 1 ஆண்டு அனுபவம் தேவை.
சம்பள விவரம்
திட்ட இன்ஜினியர் பதவிக்கு முதல் ஆண்டு ரூ.84,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு ரூ.88,000 ஆகவும் வழங்கப்படும்.
திட்ட மேற்பார்வையாளர் பதவிக்கு முதல் ஆண்டு ரூ.45,000 ஆகவும், இரண்டு ஆண்டு ரூ.48,000 ஆகவும் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து கவ்லித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் 2 ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு https://edn.bhel.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மேலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
AGM (HR), Bharat Heavy Electricals Limited, Electronics Division, P. B. No. 2606, Mysore
Road, Bengaluru-560026
முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்
16.04.2025
விண்ணப்பம் தபால் மூலம் அனுப்ப கடைசி நாள்
19.04.2025
பெங்களூரில் உள்ள மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment