இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் 51 பணியிடங்களுக்கு ரூ 30,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!
மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறையின் ஒரு பிரிவு இந்திய அஞ்சல் கட்டண வங்கி (இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி). 2018 இல் தொடங்கப்பட்ட இந்த வங்கி நாடு முழுவதும் 1,55,015 அஞ்சல் அலுவலகங்கள் மூலம், 3 லட்சம் அஞ்சல் பணியாளர்கள் மற்றும் கிராமப்புற அஞ்சல் பணியாளர்கள் (ஜிடிஎஸ்) மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டின் 9 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் வாசலுக்கே சென்று சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள நாட்டின் மிகப்பெரிய வங்கி.
இதன் மூலம் வங்கி மற்றும் நிதி நிறுவனத்தின் அடுத்த புரட்சியை ஐபிபிபி ஏற்படுத்தியுள்ளது. இந்த வங்கியில் காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். IPPB/CO/HR/RECT/2024-25/06
பணி: Executives
காலியிடங்கள்: 51
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.2.2025 தேதியின்படி 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி,எஸ்டி பிரி வினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள், ஜிடிஎஸ், ஐபிபிபி போன்ற பணிகளில் பெற்றுள்ள அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்படும்.
நேர்முகத்தேர்வுக்கு வரும்போது ஆன்லைன் விண்ணப்ப நகல் மற்றும் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.
நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுபவர்களுக்கு அது குறித்த விவரம் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே ஆன்லைன் விண்ணப்பத்தில் சரியான மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது, ஓபிசி பிரிவினர் ரூ.750, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு 150. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.ippbonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.03.2025
இணையதளத்தில் மாநில வாரியான காலியிடங்கள் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு
https://www.ippbonline.com/documents/20133/133019/1740805290092.pdf
No comments:
Post a Comment