தமிழக அரசின் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையில் 35 காலிப்பணியிடங்களுக்கு ரூ 15,000 முதல் ரூ 45,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, March 15, 2025

தமிழக அரசின் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையில் 35 காலிப்பணியிடங்களுக்கு ரூ 15,000 முதல் ரூ 45,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு

 தமிழக அரசின் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையில்  35 காலிப்பணியிடங்களுக்கு ரூ 15,000 முதல் ரூ 45,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு


தமிழக அரசின் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.


நகர்புற நல்வாழ்வு மையம், ராசா மிராசுதார் மருத்துவமனை, சித்த மருத்துவப் பிரிவு ஆகிய இடங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


பணியின் விவரங்கள்


பதவியின் பெயர்

காலிப்பணியிடங்கள்


ஆய்வக நுட்புனர் -3


சிறப்பு கல்வியாளர் -1


தெரபிஸ்ட் (Occupational Therapist)- 1


மருந்து வழங்குநர்- 10


பல்நோக்கு பணியாளர் -9


சிகிச்சை உதவியாளர் -4


மாவட்ட திட்ட மேலாளர் -1


தரவு உதவியாளர் -1


ஆயுஷ் மருத்துவ அலுவலர் -1


ஆயுஷ் மருத்துவர் -4


மொத்தம் - 35


வயது வரம்பு


தஞ்சாவூரில் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு அரசு விதிகளுக்குட்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படும். சிறப்பு கல்வியாளர் மற்றும் தெரபிஸ்ட் பதவிகளுக்கு அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.


கல்வித்தகுதி


ஆய்வக நுட்புனர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சு மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


சிறப்பு கல்வியாளர் பதவிக்கு அதற்கான சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பதிவு செய்திருக்க வேண்டும்.


தெரபிஸ்ட் பதவிக்கு இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


மருந்து வழங்குநர் பதவிக்கு D.Pharm அல்லது ஒருங்கிணைந்த பார்மசி படிப்பை முடித்திருக்க வேண்டும்.


பல்நோக்கு பணியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சிகிச்சை உதவியாளர் பதவிக்கு நர்சிங் தெரபிஸ்ட் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


மாவட்ட திட்ட மேலாளர் பதவிக்கு அதற்கான ஹோமியோபதி மருத்துவப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.


தரவு உதவியாளர் பதவிக்கு கணினி சார்ந்த படிப்பில் பட்டப்படிப்பு மற்றும் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


ஆயுஷ் மருத்துவ அலுவலர் பதவிக்கு BNYS முடித்து பதிவு செய்திருக்க வேண்டும்.


ஆயுஷ் மருத்துவர் பதவிக்கு BSMS / MD மற்றும் பதிவு செய்திருக்க வேண்டும்.


சம்பள விவரம்


ஆய்வக நுட்புனர் பதவிக்கு ரூ.13,000


சிறப்பு கல்வியாளர் பதவிக்கு ரூ.23,000


தெரபிஸ்ட் (Occupational Therapist) பதவிக்கு ரூ.23,000


மருந்து வழங்குநர் பதவிக்கு ஒரு நாளுக்கு ரூ.750


பல்நோக்கு பணியாளர் பதவிக்கு ஒரு நாளுக்கு ரூ.300


சிகிச்சை உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.15,000


மாவட்ட திட்ட மேலாளர் பதவிக்கு ரூ.30,000


தரவு உதவியாளர் பதவிக்கு ரூ.15,000


ஆயுஷ் மருத்துவ அலுவலர் பதவிக்கு ரூ.34,000


ஆயுஷ் மருத்துவர் பதவிக்கு ரூ.40,000


விண்ணப்பிக்கும் முறை


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://thanjavur.nic.in/ என்ற தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் உள்ல விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், இதர திறன்களின் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி


செயற் செயலாளர்,

மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு,

எல்ஐசி கட்டடம் அருகில், தஞ்சாவூர் - 613 001. தொலைபேசி எண் : 04362 - 273603.


விண்ணப்பிக்க கடைசி நாள்


20.03.2025


தமிழக அரசின் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் தஞ்சாவூரில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment