ரைட்ஸ் நிறுவனத்தில் மாதம் ரூ. 25,100 ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!
இந்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Site Assessors பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மார்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Site Assessors
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ. 25,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரீசியன், எல்க்ட்ரானிக் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் சோலார் பவர் இன்ஸ்லேஷன் துறையில் குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு மார்ச் 9 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும். இது குறித்த விவரம் தகுதியானவர்கள் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.300.
இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.rites.com/Career
என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
5.3.2025
மேலும் முழுமையான விவரங்களுக்கு
https://www.rites.com/Upload/Career/Advertisement_of_Site_Assessors_pdf-2025-Feb-14-22-14-30.pdf
No comments:
Post a Comment