மிகவும் பயனுள்ள 23 சமையல் குறிப்புகள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, March 4, 2025

மிகவும் பயனுள்ள 23 சமையல் குறிப்புகள்..!

 மிகவும் பயனுள்ள 23 சமையல் குறிப்புகள்..!


1.பூரி மாவுடன் எண்ணெயை சூடாக்கி பிசைந்தால் பூரி மெதுவாகவும், புஸ்ஸென்றும் வரும்.


2.இட்லி மாவு, தோசை மாவு இவைகளை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடினால் புளிக்காமல் இருக்கும்.


3.மைதா மாவில் போளி செய்வதை விட, கோதுமை மாவில் போளி செய்தால் உடலுக்கு நல்லது. சுவையாகவும் இருக்கும்.


4.கொழுக்கட்டைக்கு நீர் கொதிக்கும் போது, இரண்டு தேக்கரண்டி காய்ச்சிய பால் விட கொழுக்கட்டை வெள்ளை வெளேரென்று இருக்கும்.


5.உருளைக்கிழங்கை பொரிக்கும் முன் சிறிதளவு பயத்தம் மாவை தூவினால் மொறு மொறுப்பாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.


6.சிலருக்கு அப்பம் வார்த்தால் உருண்டு திரளாமல், கை, கால் முளைத்தது போல் உருமாறி பிய்ந்து விடும்.இதை தவிர்க்க கொஞ்சம் வெந்நீரில் வெல்லத்தை கரைத்து மாவில் சேர்த்தால் போதும்.


7.பருப்பு வகைகளை வேக வைக்கும் போது சிறிதளவு கடலை எண்ணெயையோ அல்லது பூண்டையோ போட்டு வேகவைத்தால் பருப்பு எளிதில் வெந்து விடும்.


8.குளிர்ந்த பாலில் சிறிதளவு மைதாவை கலக்கி கொதித்துக் கொண்டிருக்கும் கஸ்டர்டிலோ, சாசிலோ சேர்த்தால் பால் நன்றாக கெட்டியாகி விடும்.


9.கடுகை வாங்கியவுடன் வாணலியில் போட்டு வறுத்து எடுத்து வைத்து விட்டால் தாளிக்கும் போது வெளியில் வெடித்து, சிதறாமல் இருக்கும்.


10.தோசை, இட்லி மாவு பொங்கி வழியாமல் இருக்க, மாவின் மீது பச்சை வாழை இலை அல்லது வெற்றிலையை பரவலாக போட்டு விடவும்.


11.கமலா ஆரஞ்சு தோலை வீணாக்காமல் எண்ணெயில் வதக்கி, வத்தக்குழம்பில் போட்டு கொதிக்க விட்டால் சுவை மிகுந்த குழம்பு செய்யலாம்.


12.தேங்காய் சாதம், மாங்காய் சாதம் கலப்பது போல பெரிய நெல்லிக்காயை துருவி கொட்டை எடுத்து உப்பு, காரம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி சாதத்தில் கொட்டிக் கலந்தால் சூப்பரான நெல்லிக்காய் சாதம் ரெடி.


13.குடமிளகாயை குக்கரில் முழுதாக வைத்து விட்டால் நன்றாக வெந்து விடும். அதை கெட்டித் தயிரில் கரைத்து உப்புப் போட்டு தாளித்தால் பச்சடி ரெடி.


14.இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்சியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் களத்து வார்த்தால், இட்லி பூ மாதிரி இருக்கும்.


15.பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரமானாலும் மொறுமொறுப்பாக இருக்கும்.


16.துவரம் பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வேகவைத்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.


17.பிளாஸ்கில் வைக்கும் காபி, டீ நீண்ட நேரம் சூடாக இருக்க, வழிய வழிய ஊற்றக்கூடாது.


18.மாவடு 2, தேங்காய் துருவல் 3 ஸ்பூன், 2 பச்சைமிளகாய், மல்லித்தழை சிறிது, உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலக்கி, கடுகு தாளித்தால் மாவடு தயிர் பச்சடி தயார்.


19.அரிசி ரவையை நீர் தெளித்து, ஆவியில் வேகவைத்து, பிறகு உப்புமா செய்தால் சுவையாக இருக்கும்.


20.அரிசியை ரவை போல உடைத்து, வெந்நீரில் ஊறவைத்து, உளுந்தம் பருப்பை அரைத்து சேர்த்தால், இன்ஸ்டன்ட் இட்லி தயார்.


21.அவலை பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்து, தேங்காய்த் துருவல், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்து அதனை அவல், தயிருடன் கலந்து, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்தால் அவல் பச்சடி தயார்.


22.உளுந்தம் பருப்பை ஊறவைத்து, அரைத்து கோதுமை மாவுடன் கலந்து தோசை வார்த்தால் சுவையான சத்தான தோசை தயார்.


23.பெரிய அளவு கண்ணாடி ஜாடி அல்லது மண்பானை இவற்றில் பாதி அளவுக்கு மணலைக் கொட்டி, அதன் மேல் மாம்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், ஸ்டாபெர்ரி போன்றவற்றை போட்டு வைத்தால் விரைவில் பழுத்துவிடும். கெடாமலும் இருக்கும்.

No comments:

Post a Comment