மத்திய அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் 209 பணியிடங்களுக்கு ரூ 63200 முதல் ரூ 81,100 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, March 25, 2025

மத்திய அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் 209 பணியிடங்களுக்கு ரூ 63200 முதல் ரூ 81,100 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 மத்திய அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் 209 பணியிடங்களுக்கு  ரூ 63200 முதல் ரூ 81,100 வரை  ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


மத்திய அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் CSIR-CRRI - இல் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். ஜூனியர் ஸ்டெனோகிராஃபர், ஜூனியர் செக்ரட்டரியேட் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும்.


மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CRRI) காலியாக உள்ள 209 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் என்பதால், தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கான அனைத்து சலுகை, சம்பள உயர்வு கிடைக்கும்.


ஜூனியர் செக்ரட்டரியேட் உதவியாளர் (ஜெனரல்/எஃப்&ஏ/எஸ்&பி) - 177


ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் - 32


கல்வித் தகுதி:


ஜூனியர் செகரேட்டரியேட் பணியிடத்திற்கு 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரானவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிணியில் வேகமாக டைப் செய்ய தெரிந்து இருப்பது அவசியம்.


ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங் தெரிந்து இருப்பது அவசியம்.


வயது வரம்பு:


* ஜூனியர் செகரேட்டரியட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.



ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.


அரசாங்க விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.


சம்பளம் எவ்வளவு?


* ஜூனியர் செகரேட்டரியேட்:


 ரூ 19,900 - ரூ.63,200-


* ஸ்டெனோகிராபர்: ரூ.25,500 - ரூ.81,100-வரை


 சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு முறை:


தேர்வு முறையை பொறுத்தவரை கணிணி வழியிலான ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு ஆகியவை அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


 விண்ணப்ப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி /எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.


 விண்ணப்பிக்க வரும் 21.04.2025 கடைசி நாளாகும்.


 எழுத்து தேர்வு மே / ஜூன் மாதங்களில் நடைபெறும்.


மேலும் விவரங்களுக்கு 



https://crridom.gov.in/sites/default/files/vacancy/JSA-JST-ADVT-2025.pdf

No comments:

Post a Comment