மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 979 காலிப்பணியிடங்களுக்கான அகில இந்திய குடிமைப் பணித்தேர்வு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, February 9, 2025

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 979 காலிப்பணியிடங்களுக்கான அகில இந்திய குடிமைப் பணித்தேர்வு அறிவிப்பு

 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்தும்  979  காலிப்பணியிடங்களுக்கான அகில இந்திய குடிமைப் பணித்தேர்வு அறிவிப்பு


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் அகில இந்திய வெளியுறவுப் பணி, இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட 979 அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தேர்வு அறிவிப்பு எண். 05/2025-CSP


தேர்வு: UPSC Civil Services Examination(2025)


காலியிடங்கள்: 979


வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி 21 முபதல் 32-க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டமாக நடைபெறும். இரண்டு கட்டங்களிலும் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.



LAST DATE TO APPLY 


18.02.2025



https://upsconline.gov.in/upsc/OTRP/extended_notice.pdf


முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்:


 25.5.2025


தேர்வு நடைபெறும் இடம்: 


தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறும்.


முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். முதன்மைத் தேர்வானது சென்னையில் நடைபெறும்.


தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.



முழு அறிவிப்பைத் தெரிந்து கொள்ள 


https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-2025-Engl-220125.pdf


விண்ணப்பக் கட்டணம்: 


ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.



Instructions of filling online application 



https://upsc.gov.in/sites/default/files/Notification-Instructions-CSP-IFSP-2025-Engl-220125.pdf


விண்ணப்பிக்கும் முறை: 


தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள்


https://upsconline.gov.in/upsc/OTRP/


 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment