உச்ச நீதிமன்றத்தில் 90 பணியிடங்களுக்கு ரூ.80,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, February 6, 2025

உச்ச நீதிமன்றத்தில் 90 பணியிடங்களுக்கு ரூ.80,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!

 உச்ச நீதிமன்றத்தில் 90 பணியிடங்களுக்கு ரூ.80,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!


நாட்டின் தலைநகர் தில்லியில் செயல்பட்டு வரும் உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கு சட்டம் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்ற இளைஞர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண். F21(LC)/2025-SC(RC)


பணி: Law Clerk-cum-Research Associate


காலியிடங்கள்: 90


தகுதி: சட்டப் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து இந்திய பார்கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது சட்டப் பிரிவில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ. 80,000


வயதுவரம்பு: 7.2.2024 தேதியின்படி 20 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


 எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவர்கள் மட்டும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு குறித்து முழுவிபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்:


 போபால், பெங்களூரு, புவனேஷ்வர், தில்லி, மும்பை, திருவனந்தபுரம், ராஞ்சி, ஹைதராபாத், ஜோத்பூர், இம்பால், விசாகப்பட்டினம்,சென்னை.


எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 9.3.2025


விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. கட்டணத்தை யூகோ வங்கி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


 www.sci.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


 ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பிரிண்ட் அவுட்டை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும். நேர்முகத் தேர்வின் போது தேவையான அசல் சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:


 7.2.2025


மேலும் விவரங்கள் அறிய


https://cdn.digialm.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/12/1113874024878360159157.pdf

No comments:

Post a Comment