ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ரூ 25,000 முதல் ரூ 35,000 ஊதியத்தில் 4 காலிப்பணியிடங்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு ...! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, February 22, 2025

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ரூ 25,000 முதல் ரூ 35,000 ஊதியத்தில் 4 காலிப்பணியிடங்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு ...!

 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ரூ 25,000 முதல் ரூ 35,000 ஊதியத்தில் 4 காலிப்பணியிடங்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு ...!


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனத்துக்கு தகுதியானோா் வரும் 25-க்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.


திருவள்ளூா் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் மாவட்ட ஊராட்சி முகமையில் திடக்கழிவு மேலாண்மை நிபுணர், தகவல் கல்வி மற்றும் தொடர்பு பிரிவு ஆகிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.


இந்த தற்காலிக பணி நியமனம் செய்ய அறிவிப்பு மற்றும் இப்பணியிடங்களுக்கான விண்ணப்படிவமானது https://tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டட வளாகம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், திருவள்ளூர் அலுவலகத்தில் நேரடியாக பெற்று, பூா்த்தி செய்த விண்ணப்பங்களுடன் சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களை நகல்களுடன் வரும் 25-க்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.


குறிப்பிட்ட நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விவரங்கள் அறிய 


https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2025/02/2025021212.pdf

No comments:

Post a Comment