இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 246 காலிப்பணியிடங்களுக்கு ரூ 23,000 முதல் ரூ.1,05,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..‌! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, February 17, 2025

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 246 காலிப்பணியிடங்களுக்கு ரூ 23,000 முதல் ரூ.1,05,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..‌!

 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 246 காலிப்பணியிடங்களுக்கு  ரூ 23,000 முதல் ரூ.1,05,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..‌!



இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.


மொத்த காலிப்பணியிடங்கள்: 246


பணியின் விவரம்:


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிர்வாகம் அல்லாத கிரேடு 1 கீழ் ஜூனியர் ஆப்ரேட்டர் காலிப்பணியிடங்கள் தேசிய அளவில் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாடு உட்பட, ஹாரியானா, இமாச்சல் பிரதேசம், ஜம்மு மற்றும் காஸ்மீர், பஞ்சாப், லாடாக், உத்தர பிரதேசம், அருணாசல பிரதேசம், அச்சாம், உத்தரகாண்ட், பீகார், நாகலாந்து, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, பாண்டிசேரி மற்றும் தெலங்கானா என 215 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் 13 காலிப்பணியிடங்கள் உள்ளன.


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவில் ஜூனியர் அட்டெண்டண்ட் மற்றும் ஜூனியர் தொழில் அட்டெண்டண்ட் பதவிகள் நிரப்பப்படுகிறது. இதில் 31 காலிப்பணியிடங்கள் உள்ளன. தென் மண்டலத்தில் ஜூனியர் அட்டெண்டண்ட் பதவியில் 7 காலிப்பணியிடங்களும், ஜூனியர் தொழில் அட்டெண்டண்ட் பதவியில் 3 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு


31.01.2025 தேதியின்படி, குறைந்தபட்ச வயது 18


அதிகபட்சமாக 26 வரை இருக்கலாம்.


வயது தளர்வு;


எஸ்சி பிரிவினருக்கு 5 வருடங்கள்


ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள்


மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உள்ளது.


கல்வித் தகுதி:


ஜூனியர் ஆப்ரேட்டர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னர் ஐடிஐ-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


எலெக்ட்ரிக் மெக்கானிக், இண்ஸ்ரூமெண்ட் மெக்கானிக், இண்ஸ்ரூமெண்ட் மெக்கானிக், எலெக்ட்ரிஷன், மெக்கானிக்ஸ், மெக்கானிக் உடன் ஆப்ரேட்டர் எலெக்ட்ரானிக்ஸ், வயர்மேன், மெக்கானிக் தொழிற்சாலை எலெக்ட்ரானிக் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 1 வருட பணி அனுபவம் தேவை.


ஜூனியர் அட்டெண்டண்ட் பதவிக்கு 12-ம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் அவசியமில்லை.


ஜூனியர் தொழில் அட்டெண்டண்ட் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MS Word, Excel & Power Point உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு வேகம் அவசியம். மேலும், 1 ஆண்டு அனுபவம் தேவை.


சம்பள விவரம்:


ஜூனியர் ஆப்ரேட்டர் பதவி- ரூ.23,000 முதல் ரூ.78,000 வரை சம்பளம் வழங்கப்படும்.


ஜூனியர் அட்டெண்டண்ட் பதவி- ரூ.23,000 முதல் ரூ.78,000 வரை சம்பளம் வழங்கப்படும்.


ஜூனியர் தொழில் அட்டெண்டண்ட் பதவி- ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:


கணினி வழி தேர்வு மற்றும் திறன்/உடற்தகுதி தேர்வு நடத்தப்படும்.


ஜூனியர் தொழில் அட்டெண்டண்ட் பதவிக்கு கணினி வழி தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வு நடத்தப்படும்.


இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்


 https://iocl.com/latest-job-opening 



என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டனம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்:23.02.2025


அட்மிட் கார்டு வெளியீடு:மார்ச்/ஏப்ரல் 2025


கணினி வழி தேர்வு:ஏப்ரல் 2025


தேர்வு முடிவுகள்:ஏப்ரல்/ மார்ச் 2025


மேலும் விவரங்களுக்கு



https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/613feac7e44444bb91a7d6b610014b16.pdf

No comments:

Post a Comment