தைப்பூசம் 2025: விரதம் மற்றும் பூஜை செய்யும் முறை, நேரம் மற்றும் சொல்ல வேண்டிய மந்திரங்கள்
முருக பெருமானுக்கு இருக்க கூடிய சக்திவாய்ந்த விரதங்களில் தைப்பூசம் விரதமும் ஒன்றாகும். தை மாதத்தில் பவுர்ணமியும் பூசம் நட்சத்திரமும் இணைந்து வரக்கூடிய நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு 2025 தைப்பூசமானது, பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. பூசம் நட்சத்திரம் தொடங்கும் நேரம் – பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று மாலை 06:01 மணிக்கு தொடங்குகிறது.
பூசம் நட்சத்திரம் முடிவடையும் நேரம் – பிப்ரவரி 11 ஆம் தேதி அன்று மாலை 06:34 மணிக்கு முடிவடைகிறது. எனவே பூச நட்சத்திரம் தொடங்கி முடிவடையும் நேரத்திற்குள் தைப்பூச வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
வழிபடும் நேரம்: தைப்பூசத்தன்று, அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகனை வழிபாடு செய்ய வேண்டும். முருகன் கோவிலில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தைப்பூச நாளில் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். எனவே காலையில் குளித்து பூஜைகள் செய்யலாம். மாலை 6 மனிக்கு முருகனுக்கு நெய்வேதியம் படைத்து வழிபடலாம்.
வழிபடும் முறை: காலையில் எழுந்து தலை குளித்து விட்டு முருகன் படத்துக்கு மாலை அணிவித்து முடிந்த அளவிற்கு சிவப்பு நிற மாலை அணிவிக்கலாம். இல்லை என்றால் வேறு எந்த நிறத்திலும் அணிவித்து வழிபடலாம். சிலை இருந்தால் பால் அபிஷேகம் செய்யலாம். இல்லை என்றால் ஒரு டம்ளர் பால் வைத்து வழிபடலாம்.
தைப்பூசம் விரதம் இருப்பவர்கள் 48 நாள் விரதமிருந்து மாலை அணிந்து கோயில் செல்வார்கள். ஆனால் பலர் தைப்பூசம் அன்று விரதம் இருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் அன்று நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து விரதம் மேற்கொள்ளலாம்.
முடியாதவர்கள் பழம், பால் போன்றவற்றை சாப்பிட்டு விரத்தத்தை தொடங்கலாம். அன்றைய நாளில் முருகனுக்கு உகந்த பாடல்களை பாடலாம். காலையில் விரதத்தை தொடங்கி மாலை சாமி கும்பிட்ட பின் விரதத்தை முடிக்கலாம்.
முருகனுக்கு நெய்வேதியமாக ஏதாவது ஒரு இனிப்பு படைத்து வழிபடலாம். குழந்தைகளுக்காக காத்து இருப்பவர்கள் விரஹ்டம் இருக்கலாம். கடன் தொல்லை, கல்யாணம் என பல பிரச்சனை உள்ளவர்களும் தை பூசம் அன்று விரதம் இருந்து வழிபடலாம்.
குறிப்பாக வீட்டில் சாமி கும்பிட்டு விரதம் முடிப்பவர்கள் எளிமையாக பால் அபிஷேகம் செய்யலாம். இல்லை என்றால் ஒரு டம்ளர் பால், இனிப்பு வைத்து படைக்கலாம். சிவப்பு நிற மலர்கள் முருகனுக்கு சூட்டி வழிபடலாம்.
முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கு ஏற்ற தினம் தைப்பூச திருநாளாகும். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் தீராத வினைகள், துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. காவடி எடுப்பதன் தத்துவத்தை போற்றும் திருநாளாகும். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு எப்படி விரதம் இருக்க வேண்டும்? எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தைப்பூசம் அன்று முருகப் பெருமானுக்கு குறிப்பிட்ட முறையில் வழிபாடு செய்தால் முருகனின் அருள் மட்டுமின்றி நவகிரகங்களின் அருளும் கிடைக்கும். இதனால் துன்பங்கள், தடைகள் நீங்குவதுடன், அளவில்லாத நன்மைகளை கொடுக்கும் மிகவும் உயர்ந்த விரதம் தைப்பூச விரதமாகும்.
தைப்பூசத்தில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் தைப்பூசத்தில் முருகனுக்கு விரதம் இருந்த வழிபட்டால் தீராத பிரச்சனைகளும் தீரும் என சொல்லப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூசம் அன்று விரதம் கடைபிடிப்பது வழக்கம். முருகப் பெருமானின் தீவிர பக்தர்கள் தைப்பூசத்திற்காக 48 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர்.
தைப்பூசம் விரதம் இருக்கு முறை :
பிப்ரவரி 11ம் தேதி செவ்வாய்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் விளக்கேற்றி வைத்து, முருகனை வழிபட்டு, விரதத்தை துவக்கி விட வேண்டும். அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று, விளக்கேற்றி, முருகப் பெருமான் சன்னதியை ஆறு முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். முருகன் சன்னதியில் அமர்ந்து, முருகனின் சடாக்ஷர மந்திரமான "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை 108 முறை கண்களை மூடி, மனதில் முருகனை நினைத்து உச்சரிக்க வேண்டும். பிறகு நம்முடைய வேண்டுதலை சொல்லி முருகனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். மாலையில் வீட்டில் விளக்கேற்றி முருகனை வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
வீட்டிலேயே விரதம் இருக்கும் முறை :
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விரதம் இருக்கலாம். பூஜை அறையில் ஷட்கோண கோலமிட்டு, ஆறு அகல் விளக்குகளில் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும். முருகனுக்குரிய மந்திரங்களை, பாடல்களை படித்து வழிபட வேண்டும். முடிந்தவர்கள் முழு உபவாசமாகவும், முடியாதவர்கள் எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டும், பால் பழம் மட்டும் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். மாலையில் முருகனுக்கு நைவேத்தியம் படைத்து, மனதார வழிபட்ட பிறகு, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். முருகனுக்குரிய ஓம் சரவண பவ மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தபடி இருக்க வேண்டும்.
வழிபாட்டு சிறப்புகள் :
ஜோதிட சாஸ்திரப்படி, பூசம் நட்சத்திரம் என்பது மங்கலகாரகனான குரு பகவான் உச்சம் பெறும் நட்சத்திரமாகும். அதே போல் பெளர்ணமி சந்திரனுக்குரிய நாளாகும். இந்த ஆண்டு தைப்பூசம் செவ்வாய் பகவானுக்குரிய செவ்வாய் கிழமையில் வருவது மிக மிக விசேஷம். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தவறாமல் இந்த நாளில் வழிபட வேண்டும். தைப்பூசத்தன்று முருகப் பெருமானின் அருளுடன் குரு, சந்திரன், செவ்வாய் ஆகியோரின் அருளும் கிடைக்க சில குறிப்பிட்ட பொருட்களை முருகப் பெருமானுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடுவது நீங்கள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகளை அள்ளித் தரும்.
தைப்பூசத்தில் முருகனுக்கு படைக்க வேண்டியவை :
தைப்பூசம் அன்று பச்சரிசியில் மஞ்சள் கலந்து வைத்து, அதன் மீது ஆறு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். அந்த ஆறு விளக்குகளுக்கு முன்பு ஆறு தாமரை மலர்கள் வைத்து வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்கு சர்க்கரை பொங்கலுடன், கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். அதே போல் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மாலை சூட்டுவதும், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் மிக மிக சிறப்பானதாகும். இப்படி வழிபடுவதால் முருகன், சந்திரன், குரு பகவான் ஆகியோரின் அருளை பெற முடியும். இதனால் செவ்வாய் தோஷம் நீங்குவதுடன் செவ்வாய் பகவானின் அருளால் வீடு, சொத்து, வாகனம் வாங்கும் யோகமும் ஏற்படும்.
அன்றைய தினம் தேவையற்ற வார்த்தைகளை பேசுவதோ, கோபப்படுவதோ, வீண் விவாதங்கள் செய்வதோ கூடாது. முருகப்பெருமான் நாமத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். முருகப்பெருமானை நினைத்து தைப்பூச விரதம் இருந்தால், பகை அழியும். நவக்கிரக தோஷம் நம்மை நெருங்காது. குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும்.
சுப்பிரமணிய ஷோடச நாமாவளி
1. ஓம் ஞானசக்த்யாதமனே நம:
2. ஓம் ஸ்கந்தாய நம:
3. ஒம் அகனி காபாய நம:
4. ஓம் பாகுலேயாய நம:
5. ஓம் காகநேயாய நம:
6. ஓம் சரவணோத் பவாய நம:
7. ஓம் கார்த்திகேயாய நம:
8. ஓம் குமாராய நம:
9. ஓம் ஷண்முகாய நம:
10. ஓம் குக்குடத்வஜாய நம:
11. ஓம் சேனான்யே நம:
12. ஓம் குஹாய நம:
13. ஓம் பிரும்ம சாரிணே நம:
14. ஓம சிஜதேஜஸே நம:
15. ஓம் கௌஞ்சதாரிணே நம:
16. ஓம் சிகி வாகனாய நம
விரதத்தின் போது கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் போற்றி பாட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. விரதத்தை முடிக்கும் போது முருகனுக்கு அரோகரா கோஷம் போட்டு முடிக்க வேண்டுமாம்.
தைப்பூசம் சிறப்புகள்
தைப்பூச நாளில் தான் பூமியில் நீர் தோன்றி, அதிலிருந்து உயிர்கள் தோன்ற துவங்கியதாக புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கின்றன. தைப்பூச நாளில் தான் முருகப் பெருமான் தனது தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் தெய்தார். பராசக்தியிடம் இருந்து வேல் வாங்கி, கையில் வேல் தாங்கி முருகன் நின்ற தினம் இன்று தான். அகத்தியருக்கு முருகப் பெருமான் தமிழை கற்பித்ததும் இந்த நாளில் தான் என புராணங்கள் சொல்கின்றன. சிதம்பரம் நடராஜர், ஆனந்த தாண்டவம் ஆடி பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்கு காட்சி கொடுத்த நாளும் தைப்பூச தினம் தான்.
தைப்பூசம் அன்று
* இருவேளையும் கோவிலுக்கு செல்வது சிறப்பானது.
* முடியாதவர்கள் மாலையில் மட்டுமாவது கோவிலுக்கு சென்று முருகனை வழிபட வேண்டும்.
* தைப்பூசத்தன்று முருகன், சிவன், குரு பகவான் ஆகியோரை வழிபடலாம்.
* முருகனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், பால் பாயசம் இவற்றில் ஏதாவது ஒன்றை படைத்து வழிபடலாம்.
* தைப்பூசத்தன்று வேல் வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை தரும்.
என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?
தைப்பூசத்தன்று நாள் முழுவதும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கந்தர் கலி வெண்பா ஆகிய பாடல்களை பாராயணம் செய்யலாம். முடியாதவர்கள் "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கலாம்.
No comments:
Post a Comment