இந்து சமய அறநிலையத்துறை யில் 109 பணியிடங்களுக்கு 18,500 முதல் ரூபாய் 1,13,000 வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு
திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தட்டச்சர், காவலர், கூர்க்கா, கால்நடை பராமரிப்பாளர் உள்பட பல்வேறு பதவிகளில் மொத்தம் 109 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளத்தை பொறுத்தவரை 18,500 முதல் ரூபாய் 1,13,000 வரை சம்பளம் வழங்கப்படும்
10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
காலிப்பணியிடங்கள்:
தட்டச்சர்
காவலர்
கூர்க்கா
ஏவலாள்
உபகோயில் பெருக்குபவர்
கால்நடை பராமரிப்பாளர்
உபகோயில் காவலர்
ஓடல்
தாளம்
தொழில்நுட்ப உதவியாளர்
(மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு)
பிளம்பர்
உதவி மின்பணியாளர்
உள்பட பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
கல்வித் தகுதி:
கல்வித்தகுதியானது பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
10 ஆம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களுக்கு தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பதாரர் 01.07.2024 அன்று தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
தட்டச்சர்
ரூ. 18,500 முதல் 58,600
காவலர்
ரூ. 15,900 முதல் 50,400
கூர்க்கா
ரூ. 15,900 முதல் 50,400
தலைமை ஆசிரியர்
ரூ. 36,700- 1,16,200
ஆகம ஆசிரியர்
ரூ. 35,900- 1,13,500
வரை மாத சம்பளம்
விண்ணப்பிப்பது எப்படி?
காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த இந்து மதத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவமானது
www.hrce.tn.gov.in
மற்றும்
https://annamalaiyar.hrce.tn.gov.in
ஆகிய திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இல்லையெனில் திருக்கோயில் அலுவலகத்தில் ரூபாய் 100 செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் நேரிலும் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று பிற்பகல் 05.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தேர்வு முறை:
தேர்வு முறையானது அடிப்படை கல்வித்தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் "பணியிட வரிசை எண்........... மற்றும் பணியிடத்திற்கான விண்ணப்பம்" என தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும், ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
இணைப்புகளுடன் வரப்பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்,
திருவண்ணாமலை - 606 601.
No comments:
Post a Comment