SBI வங்கியில் பணி புரிய 600 பணியிடங்களுக்கு ரூ 48,480 முதல் ரூ 85,920 வரை வேலை வாய்ப்பு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, January 1, 2025

SBI வங்கியில் பணி புரிய 600 பணியிடங்களுக்கு ரூ 48,480 முதல் ரூ 85,920 வரை வேலை வாய்ப்பு அறிவிப்பு

 SBI வங்கியில் பணி புரிய 600 பணியிடங்களுக்கு ரூ 48,480 முதல் ரூ 85,920 வரை வேலை வாய்ப்பு அறிவிப்பு


பாரத ஸ்டேட் வங்கியில் 600 தகுதிகாண் பருவ(பிரொபேஷனரி) அதிகாரியாக நியமனத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கியின் மத்திய பணியமர்த்தம் மற்றும் உயர்வுத் துறை கார்ப்பரேட் மையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.CRPD/PO/2024-25/22


பதவி: Probationary Officers (PO)


காலியிடங்கள்: 600


தகுதி: 


ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 


1.4.2024 தேதியின்படி 20 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.


சம்பளம்: மாதம் ரூ. 48.480 - 85,920


தேர்வு செய்யப்படும் முறை:


 முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


தேர்வு வினாத்தாள் ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும்.


தேர்வு மையம்:


 முதல்நிலைத் தேர்வு சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய மையங்களில் நடைபெறும்.


முதன்மைத் தேர்வு சென்னை, மதுரை, திருநெல்வேலியில் நடைபெறும்.


விண்ணப்பக் கட்டணம்: 


எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள்


 https://ibpsonline.ibps.in/sbiponov24/


 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:


 16.1.2025


மேலும் விவரங்கள் அறிய


 

https://drive.google.com/file/d/1k7LA_U-3B0ljp0WVFG7Zm0NvzTSHwCAl/view?usp=drivesdk


 என்ற வங்கி வலைதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment