CBSE கல்வி வாரியத்தில் 212 பணியிடங்களுக்கு 19,100 முதல் 1,12,400 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, January 3, 2025

CBSE கல்வி வாரியத்தில் 212 பணியிடங்களுக்கு 19,100 முதல் 1,12,400 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!

 CBSE கல்வி வாரியத்தில் 212 பணியிடங்களுக்கு 19,100 முதல் 1,12,400 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய கல்வித்துறையின் கீழ் தன்னாட்சியாக இயங்கும் அமைப்பான சிபிஎஸ்இ-யில் உள்ளது. இங்கு இருக்கும் கண்காணிப்பாளர் மற்றும் ஜூனியர் உதவியாளர் ஆகிய பதவிகள் தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.


பட்டப்படிப்பு முடித்தவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


பணியின் விவரங்கள்


கண்காணிப்பாளர் 142


ஜூனியர் உதவியாளர் 70



மொத்தம் 212


இதில் எஸ்சி பிரிவில் - 30, எஸ்டி பிரிவில் - 19, ஒபிசி பிரிவில் - 72, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் - 27, பொதுப் பிரிவினருக்கு - 64 இடங்கள் என நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு


சிபிஎஸ்இ கண்காணிப்பாளர் பதவிக்கு அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம்.

ஜூனியர் உதவியாளர் பதவிக்கு அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம்.


31.01.2025 தேதியின்படி, வயது வரம்பில் எஸ்சி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.


 மேலும் பெண்களுக்கு 10 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.


கல்வித் தகுதி


கண்காணிப்பாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் கணினி இயக்கும் திறன் தேவை.

ஜூனியர் உதவியாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.


சம்பள விவரம்


சிபிஎஸ்இ கீழ் நிரப்பப்படும் கண்காணிப்பாளர் பதவிக்கு நிலை 6 மற்றும் ஜூனியர் உதவியாளர் பதவிக்கு நிலை 2 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.


Superintendent (மேற்பார்வையாளர்): பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.35400 முதல் ரூ.112400 வரை வழங்கப்படும்.


Junior Assistant (இளநிலை உதவியாளர்): பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை


இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு முலம் தேர்வு செய்யப்படுவார்கள். கண்காணிப்பாளர் பதவிக்கு 2 கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடைபெறும். ஜூனியர் உதவியாளர் பதவிக்கு முதல் நிலை தேர்வு மற்றும் திறன் தேர்வு நடைபெறும்.


கண்காணிப்பாளர் பதவிக்கு முதல் நிலை தேர்வு ஓஎம்ஆர் தாளில் 450 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வு, கொள்குறி வகை மற்றும் விரிவாக விடையளிக்கும் வகையில் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதனைத்தொடர்ந்து, தட்டச்சுக்கான திறன் தேர்வு நடைபெறும். இதில் முதல்நிலை தேர்வு பத்தாம் வகுப்பு தரத்திலும், முதன்மைத் தேர்வு பட்டப்படிப்பு தரத்திலும் அமையும்.


ஜூனியர் உதவியாளர் பதவிக்கு ஓஎம்ஆர் முறை தகுதித் தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தட்டச்சுக்கான திறன் தேர்வு நடைபெறும். தேர்வு பத்தாம் வகுப்பு தரத்தில் அமையும்.


விண்ணப்பிக்கும் முறை


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்

  


https://admissions.nic.in/CBSERecruitment/Applicant/Root/Home.aspx?enc=yVQCIiq12npg+pcvNJRdcxNUkIVheuTeuKIXIyd0SUzxwIU/21Y+lXhiS/+z2LAn


என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


 விண்ணப்பக் கட்டணமாக ரூ. 800 செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கக் கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்க கடைசி நாள்


31.01.2025


சிபிஎஸ்இ-யின் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.


 கூடுதல் விவரங்கள் மற்றும் அறிவிப்பை


https://drive.google.com/file/d/1kuc0gCvN8X-w344ltcea_VbtBEXQjBJC/view?usp=drivesdk


 என்ற  இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment