இறைவனை பூஜிப்பதற்கு எந்த பூக்களை பயன்படுத்தக்கூடாது?
பரமேஸ்வரனை தாழம்பூவினாலும், துர்கையை அறுகம்புல்லாலும், சூரியனை வில்வ இலையாலும், பைரவரை மல்லிகையாலும், லட்சுமி தேவியை தும்பைப் பூவினாலும், விஷ்ணுவை ஊமத்தை மற்றும் எருக்கம்பூவினாலும், சரஸ்வதி தேவியை பவளமல்லியாலும் அர்ச்சனை செய்யக்கூடாது.
ஒரு சிலர் விநாயகப் பெருமானை துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், விநாயகர் சதுர்த்தி பூஜா விதானத்தில் 21 வகையான இலைகளைக் கொண்டு பூஜிக்கும்போது, த்வைமாதுராயை நம: என்ற நாமத்தைச் சொல்லி துளசி பத்ரம் சமர்ப்பயாமி என்று கொடுத்திருக்கிறார்கள்.
ஆக, விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யலாம் என்கிற விதிவிலக்கு சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
No comments:
Post a Comment