சுட சுட இட்லிக்கு அசத்தலான மணக்க மணக்க சாம்பார் வைப்பது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, January 29, 2025

சுட சுட இட்லிக்கு அசத்தலான மணக்க மணக்க சாம்பார் வைப்பது எப்படி?

 சுட சுட இட்லிக்கு அசத்தலான மணக்க மணக்க சாம்பார் வைப்பது எப்படி?


தேவையான பொருட்கள்:


துவரம்பருப்பு -ஒரு கப்


பெரிய வெங்காயம்- 2


தக்காளி-4


சாம்பார் காய் ஏதேனும் ஒன்று அல்லது கலவையாக- 150 கிராம்


புளி -சிறிய எலுமிச்சை அளவு


மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன்


கறிவேப்பிலை- சிறிது


மல்லித்தழை -சிறிதளவு


உப்பு -தேவையான அளவு


பெருங்காயம் -அரை டீஸ்பூன்.


வெல்லம் -சிறு துண்டு




வறுத்துப் பொடிக்க:


காய்ந்த மிளகாய்-6


தனியா-ஒன்றரை டேபிள்ஸ்பூன்


 கடலைப்பருப்பு-ஒரு டேபிள்ஸ்பூன்


கடுகு- அரை டீஸ்பூன்


வெந்தயம் -அரை டீஸ்பூன்


மிளகு-அரைடீஸ்பூன்


சீரகம்-ஒரு டீஸ்பூன்


கறிவேப்பிலை- கைப்பிடி அளவு


எண்ணெய்-2 டீஸ்பூன்.


தாளிக்க:


கடுகு உளுத்தம்பருப்பு -தலா அரை டீஸ்பூன்


எண்ணெய்-2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:


பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். காய்கறியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறு தீயில் சிவக்க வறுத்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.


2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறி சேர்க்கவும். காய்கறி நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதில் சேர்க்கவும்.


பச்சை வாசனை போக கொதித்ததும், பொடியை தூவி கிளறி பருப்பையும் கரைத்து சேர்க்கவும். 5 நிமிடம் கொதித்ததும் கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும். இறக்கும் தருவாயில் ஒரு துண்டு வெல்லம் சேர்க்கவும். மணக்க மணக்க ஹோட்டல் சாம்பார் ரெடி.


பருப்புடன் ஒரு சிறு துண்டு மஞ்சள் பூசணியை சேர்த்து வேக விட்டால் மணம் இன்னும் சூப்பராக இருக்கும்.

No comments:

Post a Comment