சுவையான (கோபி 65) காலிபிளவர் 65 செய்வது எப்படி?
4 பேருக்கு
அரைக்கிலோ காலிஃப்ளவர்
1/2 கப் சோள மாவு
1/2 கப் மைதா மாவு
1/4 கப் அரிசி மாவு
2 1/2 ஸ்பூன் வரமிளகாய்த்தூள்
1/2 ஸ்பூன் கரம் மசாலா பொடி
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2 மூடி எலுமிச்சை சாறு
தேவையானஅளவு உப்பு
தேவையான அளவு பொரிக்க எனண்ணெய்
செய்முறை
முதலில் காலிபிளவரை தேவையான வடிவில் நறுக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்த காலிபிளவர் துண்டுகளை கொதிக்கும் சுடு தண்ணீரில் சேர்த்து உப்பு மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி விடவும்.
பிறகு தண்ணீரில் இருந்து காலிஃப்ளவர் துண்டுகளை எடுத்து வடித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
பிறகு அதனுடன் ஒவ்வொன்றாக முறையே சோள மாவு,அரிசி மாவு, மைதா மாவு,மிளகாய் தூள்,கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது,அரைமூடி எலுமிச்சைச்சாறு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
அடுப்பில் எண்ணை வைத்து காய்ந்தவுடன் ஊறிய காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அருமையான சுவையான காலிஃப்ளவர் 65 தயார்.
No comments:
Post a Comment