மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்களுக்கு ரூ.19,000 முதல் ரூ 63,200 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, January 22, 2025

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்களுக்கு ரூ.19,000 முதல் ரூ 63,200 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்களுக்கு ரூ.19,000 முதல் ரூ 63,200 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


சிஎஸ்ஐஆர் கீழ் இயங்கும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவின் கீழ் டெக்னீஷியன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன.


பணியின் விவரம் 


பதவி:டெக்னீஷியன்


காலிப்பணியிடங்கள் :41


இதில்


மெக்கானிக்


ஆய்வக உதவியாளர்


ஏசி ரிபேர்


வரைவாளர்


பிசியோதெரபிஸ்ட்,


மருத்துவ ஆய்வக டெக்னீஷியன்


நர்சிங்


மருத்துவமனை உதவியாளர்


ஆய்வக விலங்குகள் பாதுகாப்பாளர்


தூய்மை பணியாளர்


பார்மிஸ்ட்


நெர்வர்க் பாதுகாப்பு


கணினி ஆப்ரேட்டர்


நூலகர்


பதிப்பக ஆப்ரேட்டர்


 லெதர் பொருட்கள் தயாரிப்பவர்


காலணி தயாரிப்பவர்


மலர் வளர்ப்பவர்


மோட்டார் வாகன மெக்கானிக் 


ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு


மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு அதிகபடியாக 28 வயது வரை இருக்க வேண்டும். 


வயது வரம்பில் மத்திய அரசின் விதிமுறைகளின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும் தளர்வு உள்ளது.


 அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்கள் வயதில் தளர்வு உண்டு.


 விவகாரத்து பெறப்பட்ட பெண்கள், கணவரை இழந்த பெண்களுக்கு உச்சப்பட்ச வயது வரம்பு 35 வயரை இருக்கலாம்.

 மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.


கல்வித் தகுதி


இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னர், சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


 முழுமையான கல்வித் தகுதியை அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம். 


அறிவிப்பைப் பார்க்க 



https://technician2024.clri.org/uploads/advt/CLRI-Advertisement-No-01-2025.pdf



கிளிக் செய்யவும்.


சம்பள விவரம்


மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள டெக்னீஷியன் பணியிடங்களுக்கு ரூ.19,000 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை


இப்பணியிடங்களுக்கு திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


 திறன் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்


 https://www.clri.org/Careers.aspx 


என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


 விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.


 எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.


விண்ணப்பிக்க கடைசி நாள்


16.02.2025


மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள டெக்னீஷியன் பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.


 இப்பணிக்கான கூடுதல் விவரங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் உள்ள அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment