பெல் நிறுவனத்தில் ரூ 40,000- 1,40,000 ஊதியத்தில் 350 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, January 25, 2025

பெல் நிறுவனத்தில் ரூ 40,000- 1,40,000 ஊதியத்தில் 350 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!

 பெல் நிறுவனத்தில் ரூ 40,000- 1,40,000 ஊதியத்தில் 350 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!


பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புரபேஷனரி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண். 17556/HR/All India/2025


பணி: Probationary Engineer


காலியிடங்கள்: 200


சம்பளம்: மாதம் ரூ. 40,000- 1,40,000


தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.


பணி: Probationary Engineer


காலியிடங்கள்: 150


சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000


தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 25-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்டி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம்: 


பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


 தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.


எழுத்துத் தேர்வு மையம்:


 தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலியில் நடைபெறும்.


விண்ணப்பிக்கும் முறை: 


www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து, அதனை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்:


அதிகாரப்பூர்வ BEL இணையதளத்தைப் பார்வையிடவும்:


 bel-india.in .



career பகுதிக்குச் சென்று, தொடர்புடைய job link-ஐ தேர்ந்தெடுக்கவும்.


செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யவும்.


துல்லியமான விவரங்களுடன் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.


கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சமீபத்திய புகைப்படம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.


ஆன்லைன் கட்டண நுழைவாயில் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை (பொருந்தினால்) செலுத்தவும்.


விண்ணப்பத்தை சமர்ப்பித்து, எதிர்கால குறிப்புக்காக ஒரு நகலை வைத்திருங்கள்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.1.2025


மேலும்  முழு விவரங்கள் அறிய


https://bel-india.in/wp-content/uploads/2025/01/All-India-External-Ad_EN.pdf


விண்ணப்பிப்பதற்கான link


https://test.cbexams.com/EDPSU/BEL/Apps/Registration/RegStep.aspx

No comments:

Post a Comment