இந்திய ரயில்வேயில் 32,438 பணியிடங்களுக்கு ரூ 18,000 முதல் ரூ 25,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு
இந்திய ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி அறிக்கை வெளியிட்டுள்ளது.
குரூப் டி பிரிவில் Pointsman B (Traffic), Assistant (Track Machine) (Engineering), Assistant (Bridge) (Engineering), Assistant (Workshop) (Mechanical) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.
இதில், வடக்கு ரயில்வேயில் 4,785 பணியிடங்கள், மேற்கு ரயில்வேயில் 4,672, மத்திய ரயில்வேயில் 3,244, தெற்கு ரயில்வேயில் 2,694 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது தவிர மற்ற மண்டலங்களில் உள்ள காலி பணியிடங்கள் குறித்தான விவரங்களும் வெளியாகியுள்ளது.
இந்த காலி பணியிடங்களுக்கு ஜனவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ.யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடிப்படை ஊதியமாக ரூ. 18,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் மற்ற படி தொகைகள் எல்லாம் சேர்த்து சுமார் ரூ. 25,000 வரை ஊதியமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
தேர்வுகள் இரண்டு நிலையில் நடக்கிறது. முதலில் கணினி அடிப்படையிலான தேர்வு, அதனை அடுத்து உடல் தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. இதனை அடுத்து ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார். தேர்வை தமிழிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான தகவல்களை
https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_08_2024_level1.pdf
பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினை சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 36 வயது வரையிலும், ஓ.பி.சி பிரிவில் நான் கிரீமி லேயரை சேர்ந்தவர்கள் 39 வயது வரையிலும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 41 வயது வரையிலும் விண்ணப்பம் செய்ய முடியும்.
No comments:
Post a Comment