குரூப் 2, 2ஏ தேர்வு: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் டிசம்பர் 12-ம் தேதி வெளியானது.
இந்நிலையில், பிப்ரவரியில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கு தனித்தனியாக முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது. ஹால் டிக்கெட்டை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 08/2024, நாள் 20.06.2024-ன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) பணிகளுக்கான கொள்குறி வகை முதல்நிலை தேர்வு (OMR) 14.09.2024 முற்பகல் நடைபெற்றது.
தற்போது தேர்வாணைய பிற்சேர்க்கை 6: 080/2024, நாள் 19.12.2024-601 படி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (Group II and Group IIA Services) முதன்மைத் தேர்வு தாள் II பொது அறிவு மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் மற்றும் மொழி (பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) கொள்குறி வகை தேர்வு (OMR) 08.02.2025 முற்பகல், தாள் I தமிழ்மொழி தகுதித் தேர்வு (Descriptive) 08.02.2025 பிற்பகல் மற்றும் தொகுதி II பணிகள் (Group-II Services) பொதுஅறிவு தாள் II (Descriptive) 23.02.2025 முற்பகல் நடைபெற உள்ளது.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?
இதற்கான ஹால் டிக்கெட்டை (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான
https://www.tnpsc.gov.in/
மற்றும்
https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==
என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே அவர்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு தேதிகள்
குரூப் 2 மற்றும் 2ஏ முதல் தாள்
08.02.2025
குரூப் 2 இரண்டாம் தாள்
23.02.2025
குரூப் 2ஏ இரண்டாம் தாள்
08.02.2025
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு முதன்மைத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை உடனே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஹால் டிக்கெட்டில் தேர்வு தேதி மற்றும் தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கி இருக்கும். தேர்வு எழுத செல்லும்போது ஹால் டிக்கெட் எடுத்துச் செல்லுவது அவசியமாகும்.
No comments:
Post a Comment