எஸ்பிஐ வங்கியில் 151 பணியிடங்களுக்கு மாதம் ரூ. 64,820 - 93,960 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, January 19, 2025

எஸ்பிஐ வங்கியில் 151 பணியிடங்களுக்கு மாதம் ரூ. 64,820 - 93,960 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 எஸ்பிஐ வங்கியில் 151 பணியிடங்களுக்கு மாதம் ரூ. 64,820 - 93,960 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள வணிக நிதி அலுவலர், துணை மேலாளர் (காப்பக நிபுணர்)பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Trade Finance Officer (MMGS-II)


காலியிடங்கள்: 150


சம்பளம்: மாதம் ரூ. 64,820 - 93,960


தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளங்கலை பட்டம் முடித்திருப்பதுடன் ஐஐபிஎப் வழங்கும் Forex சான்றிதழ் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு:


 31.12.2024 தேதியின்படி 23 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.


பணி: Deputy Manager (Archivist) - 1


தகுதி:


 குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் நவீன இந்திய வரலாற்றில் சிறப்புப் பாடத்துடன் வரலாற்றில் முதுகலை பட்டம் (கி.பி. 1750-க்கு பிந்தைய காலம்) பெற்றிருக்க வேண்டும். காப்பக மேலாண்மை, பொதுப் பதிவு மேலாண்மை, பாதுகாப்பு, மறுபதிவு, தனியார் ஆவணக் காப்பகம், வணிக ஆவணக் காப்பகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம்


 ரூ.64,820 - 93,960


வயதுவரம்பு:


 31.12.2024 தேதியின்படி 27 முதல் 37-க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 மாதம் பயிற்சிக்கு பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும்.


விண்ணப்பக் கட்டணம்: 


எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


 https://bank.sbi/web/careers/current-openings 



 என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:


 23.1.2025


மேலும் விவரங்கள் அறிய


 https://sbi.co.in/documents/77530/43947057/03012025_ADV_CRPD_+SCO_2024-25+_+21_+Archivist.pdf/d8be1686-513a-fbd8-3dac-634f194a3b15?t=1735882836856



 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment