ஜனவரி 13 ஆருத்ரா தரிசனம்: 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர்கோயிலில் ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜன.12-ஆம் தேதி தேரோட்டமும், 13-ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது. இந்த விழாவின் போது நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான கூடுவது வழக்கம். எனவே, அன்றைய நாள் அனைவரும் நடராஜரை தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை ஈடுகட்டும் விதமாக ஜனவரி 13 ஆம் தேதிக்குப் பதில் பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொங்கல் விடுமுறையும் சேர்ந்து வருவதால் கடலூர் மாவட்டத்து தொடர்ந்து 6 நாள்கள் விடுமுறை கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டதிற்கு 2025 ஜன.13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
பொது (பல்வகை) துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண்: 154 பொது (பல்வகை)த் துறை நாள் :
03.09.2020-ன் படி, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 2025 ஜன.13ம் தேதிஅன்று ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு ஜன.25ம் தேதி அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 25-ம் தேதி வழக்கம்போல் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 13.01.2025 திங்கள்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment