12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆதார் சேவை மையத்தில் 195 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!
மத்திய அரசின் இ-கவெர்னன்ஸ் சேவைகள் கீழ் தேசிய அளவில் காலியாக வுள்ள ஆதார் மேற்பார்வையாளர்/ ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் உள்ள காலிப்பணியிடங்களில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் காலிப்பணியிடம் உள்ளது. இப்பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர்
ஆதார் மேற்பார்வையாளர்/ஆபரேட்டர் 195
இதில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 1 காலிப்பணியிடம் உள்ளன. கர்நாடகாவில் 8 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு
இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
ஆதார் மேற்பார்வையாளர்/ஆபரேட்டர் பதவிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றி 2 வருடம் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அடிப்படை கணினி திறன் அவசியம். விண்ணப்பதார்கள், ஆதார் மேற்பார்வையாளர்/ஆபரேட்டர் பதவிக்கான சான்றிதழை UIDAI அங்கீகரித்த சோதனை மற்றும் சான்றளிக்கும் நிறுவனத்திடம் பெற்று இருக்க வேண்டும்.
சம்பள விவரம்
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் ஊதிய விதிமுறைகளில் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
.விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://csc.gov.in/ask என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
28.02.2025
இ-கவெர்னன்ஸ் சேவைகள் பிரிவில் ஆதார் சேவா கேந்திரா மையங்களில் உள்ள மேற்பார்வையாளர்/ ஆப்ரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment