வாட்ஸ் அப்பில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்..!
வாட்ஸ் அப் செயலியில் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பிரபலமான சமூகவலைதளம் ஆகும்.
ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு அவ்வப்போது புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வசதிகள் அறிமுகப்படுத்தும் போது, பயனர்களின் தனியுரிமை காப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறது. பிரைவசி செட்டிங்கில் மாற்றங்கள் கொண்டு வருகிறது.
அந்தவகையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் தற்போது ஆவணங்களை ஸ்கேன் செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது. இதனால் மூன்றாம் தரப்பு செயலிகளை ஸ்கேனிற்கு பயன்படுத்த தேவையில்லை. வாட்ஸ் அப்பில் ஸ்கேன் செய்து அப்படியே ஆவணங்களை அனுப்பலாம். முதற்கட்டமாக IOS பயனர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்ட்டு போன்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment