சுவையான சிறுகிழங்கு பொரியல் செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, December 29, 2024

சுவையான சிறுகிழங்கு பொரியல் செய்வது எப்படி?

 சுவையான சிறுகிழங்கு பொரியல் செய்வது எப்படி?


தேவையான பொருள்கள் :


சின்ன வெங்காயம் – ஒரு கப்


எண்ணெய் -தேவையான அளவு


 தாளிக்க


கடுகு- சிறிதளவு


உளுந்து- சிறிதளவு


சிறுகிழங்கு-கால்கிலோ


சீரகம்- ஒரு டேபிள் ஸ்பூன்


மிளகுதூள், மஞ்சள் தூள் -சிட்டிகை அளவு


காய்ந்த மிளகாய் -இரண்டு


கறிவேப்பிலை கொத்தமல்லி -சிறிதளவு


உப்பு – தேவைக்கு ஏற்ப


செய்முறை :


சிறுகிழங்கில் நிறைய மண் இருக்கும் அதனால சிறுகிழங்கை நன்றாக அலசிவிட வேண்டும்.


முதலில் சிறுகிழங்கை குக்கரில் நான்கு விசில் கொடுத்து வேகவைக்கவும்.


 தொட்டாலே சிறுகிழங்கு தோல் உறிந்து கிழங்கு தனியாக வரும். பயப்பட வேண்டாம் கிழங்கு குழைந்துவிடாது.

தோலுரித்து எடுத்து வைத்த சிறுகிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளலாம். அல்லது மசித்து கொள்ளலாம்.


கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு சின்ன வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.


பின்னர் காய்ந்த மிளகாயை கிள்ளி, கருவேப்பிலை போட்டு வதக்கவும். வேகவைத்த சிறுகிழங்கு சேர்த்து மஞ்சள் தூளையும் போட்டு, சற்று கிளறி விட்டு நாலாப்பக்கமும் மஞ்சள் தூள், கிழங்கில் பரவியதும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.


   லேசாக பொன்னிநிறமாக மாறும் நேரம் மிளகுதூள் மற்றும் கொத்தமல்லி இழையை தூவி இறக்கிடலாம்.


    பருப்பு(சாதம்) குழம்பிற்கு ரசம் போன்றவற்றிற்கு இந்த சிறுகிழங்கு பொரியல் சுவையைக் கூட்டும்.


   இதுவும் அதலக்காய் போன்று இந்த சீசனில் மட்டும் கிடைக்கும்.


   உருளைக் கிழங்கு சுவையை விரும்புவோருக்கே இந்த கிழங்கின் சுவை மாறுபட்டிருக்கும்.

No comments:

Post a Comment