வீட்டில் சாமி கும்பிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, December 21, 2024

வீட்டில் சாமி கும்பிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்

 வீட்டில் சாமி கும்பிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்


கர்ம வினைகளுக்கு நாம் கடவுளை வணங்குவதற்கும் இடையே பெரிய தொடர்பு உண்டு என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..?


நீங்கள் கடவுளை தூய மனதுடன் வழி பட முடியவில்லை. வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை , தெய்வ மந்திரங்களை உச்சரிக்க முடியவில்லை எனில் அதற்கெல்லாம் கர்ம வினைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.


இந்த கர்ம வினையால் நிகழும் விதிகளை நீங்கள் மாற்றி அமைக்க நினைக்கிறீர்கள் எனில் அதற்கு ஒரே பரிகாரணம் நித்தமும் கடவுளை வணங்குவதுதான். எத்தனை தடைகள் வந்தாலும் கடவுளை பூஜிப்பது மட்டுமே உங்கள் வாழ்க்கையில் அளவில்லா இன்பத்தை கொடுக்கும். அந்தவகையில் நீங்கள் கடவுளுக்கு பூஜை செய்யும்போது இந்த 3 விஷயங்களை கடைப்பிடிப்பது அவசியம். இதை சாஸ்திரப்படி திரிகரன சுத்தி என்று அழைக்கின்றனர்.


ஆண்டாள் பெருமாளை நிதம் துதி பாடி வழிபாடு செய்த போது இந்த 3 விஷயங்களைதான் கடைப்பிடித்திருக்கிறார். அதுமட்டுமன்றி இப்படித்தான் இறைவனை வழிபட வேண்டும் என்றும் சொல்லி வைத்துள்ளனர்.


முன்னோர்கள் இறைவனை ஒரு நாள் வழிபடவில்லை என்றாலும் அன்றைய நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருப்பார்களாம். இறைவனை ஆராதனை செய்து ஆசி கிடைத்த பின்பே உணவு சாப்பிடுவார்களாம். ஆனால் இன்றைய கலியுகத்தில் அதெல்லாம் மாறிவிட்டது.


கடவுளை பூஜித்து வழிபட்ட பின்புதான் சாப்பிட வேண்டும் என்றால் பலபேர் பட்டினியாகவே இருக்க வேண்டும். இதற்காகத்தான் எளிமையான முறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது நீங்கள் குளித்து நீராடிய பின் கோவிந்தா , ஹரஹரா, சிவசிவ, நாராயணா என்று இஷ்ட தெய்வத்தை மனத்தில் நினைத்துக்கொண்டு மூன்று சொல்லுங்கள். அதுவே போதுமானது. அதற்கு பின் சாப்பிடும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இதனால் அன்றைய நாள் உங்களுக்கு நல்லவிதமாக அமையும். உங்க இஷ்ட தெய்வம் துணை நிற்பார்.


பூஜையில் கடைபிடிக்க வேண்டிய 3 விஷயங்கள் :


கை , வாய் , மனது இந்த 3 விஷயங்களை ஒருநிலைப்படுத்துவதே பூஜைக்கான முக்கிய விதியாகும். அதாவது பூஜையின்போது திரிகரன சுத்தத்தோடு செய்ய வேண்டும் என்பார்கள். இறைவனை வழிபடும்போது உங்கள் கைகளால் புஷ்பங்களை தூவி, வாய் முழுக்க கடவுளின் நாம மந்திரங்களை பாட, மனதை தூய எண்ணங்களோடு ஒருநிலைப்படுத்தி கடவுளை பூஜிக்க வேண்டும். இப்படி கை, வாய், மனது மூன்றும் ஒருநிலையில் இருக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே வழிபாட்டின் முழு பலனையும் பெற முடியும் என்று சாஸ்திர வேதங்கள் சொல்கின்றன. கடவுளை எங்கு கும்பிடுகிறோம் என்பதை விட வணங்கும்போது எந்த அளவிற்கு ஆத்மார்த்தமான முறையில் கடவுளை சரணடைகிறோம் என்பதே முக்கியம். அதை செய்தாலே இறைவன் எப்போதும் உங்களுக்கு துணை நிற்பார்.

No comments:

Post a Comment