இந்து சமய அறநிலையத்துறையில் 296 காலியிடங்களுக்கு ரூ 31,500 முதல் ரூ 1,16,200 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இதற்கு இந்து மதத்தைச் சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
வெளித்துறை பணியிடங்கள்: 252
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
பணி: சீட்டு விற்பனையாளர்
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
பணி: சத்திரம் காப்பாளர்
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: சுகாதார மேஸ்திரி(மலைக்கோயில்)
காலியிடங்கள்: 2
காலியிடங்கள்: 2
பணி: சுகாதார மேஸ்திரி(அனைத்து உப நிறுவனங்கள்)
காலியிடங்கள்: 1
பணி: சுகாதார மேஸ்திரி(அனைத்து உப கோவில்கள்)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: பூஜை(ம) காவல் (உபகோவில்)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
பணி: காவல் (மலைக்கோவில்)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
பணி: காவல்(உபகோவில்கள் மற்றும் உப நிறுவனங்கள்)
காலியிடங்கள்: 44
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
பணி: தூய்மைப் பணியாளர்(மலைக்கோவில்)
காலியிடங்கள்: 57
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு
தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: தூய்மைப் பணியாளர்(உபகோவில்கள் மற்றும் உபநிறுவனங்கள்)
காலியிடங்கள்: 104
பணி: கால்நடை பராமரிப்பு
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு
தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: உதவி யானை மாவுத்தர்(உபகோவில்)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருப்பதுடன் யானைக்கு பயிற்சி அளித்தல், கட்டையிடுதல், வழிகாட்டுதல் மற்றும் பேசுதல் போன்ற திறன்களை பெற்றிருக்க வேண்டும்.
பணி: சுகாதார ஆய்வாளர் (உபகோவில்கள்)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,12,800
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப காலிப்பணியிடங்கள்: 30
பணி: உதவிப்பொறியாளர்(மின்னணுவியல்) - 1
பணி: உதவிப்பொறியாளர்(சிவில்) - 4
சம்பளம்: மாதம் ரூ.36,700 - 1,16,200
தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: இளநிலை பொறியாளர்(மின்) - 1
பணி: இளநிலை பொறியாளர்(ஆட்டோமொபைல்) - 1
பணி: இளநிலை பொறியாளர் (மெக்ட்ரானிக்ஸ் ரோபோடிக்ஸ்) - 1
சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500
பணி: மேற்பார்வையாளர்(சிவில்) - 3
பணி: மேற்பார்வையாளர்(இயந்திரவியல்) - 3
பணி: தொழில்நுட்ப உதவியாளர்(மின்) - 2
பணி: தொழில்நுட்ப உதவியாளர்(டிஇசிஇ) - 1
பணி: தொழில்நுட்ப உதவியாளர்(இயந்திரவியல்) - 1
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயப் படிப்பை (டிப்ளமோ) முடித்திருக்க வேண்டும்.
பணி: கணினி இயக்குநர் - 3
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: கணினி அறிவியல் துறையில் டிப்ளமோ முடித்திருப்பதுடன் தமிழ் மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பணி: ஆய்வக நுட்பனர்(பஞ்சாமிர்தம்) - 1
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக படிப்பில் (டெக்னீஷியன்) டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: மெசின் ஆப்ரேட்டர் - 1
தகுதி: அரசு, அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் துறையில் மெக்கட்ரானிக்ஸ் அல்லது ரோபாட்டிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: வின்ச் ஆப்ரேட்டர் - 1
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
பணி: மெசின் ஆப்ரேட்டர்(பஞ்சாமிர்தம்) - 1
பணி: ஹெல்பர் - 1
சம்பளம்: மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.16,600 - 52,400
பணி: எச்.டி. ஆப்ரேட்டர் - 1
சம்பளம்: மாதம் ரூ.18,200 - 57,900
தகுதி: அரசு,அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மின்சார வாரியத்திடம் எலக்ட்ரிக்கல் “பி” மற்றும் “எச்” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஓட்டுநர் - 1
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் முதலுதவி சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: 1
பணி: ஆகம ஆசிரியர் அர்ச்சகர் பயிற்சி பள்ளி - 1
சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500
தகுதி: வேத ஆகம பாடசாலைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் ஆசிரியராக அல்லது இந்து மதத்தின் கீழ் உள்ள கோவில்கள் மற்றும் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மூத்த அர்ச்சகராக பணியாற்றிருக்க வேண்டும்.
ஆகம பாடசாலையில் சைவ ஆகமத்தில் நான்கு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உள்துறை காலிப்பணியிடங்கள்: 13
பணி: அத்யானப்பட்டர் (மலைக்கோவில்) - 1
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
பணி: அர்ச்சகர்(உபகோவில்) - 2
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
பணி: நாதஸ்வரம் (உபகோவில்)- 2
பணி: தவில்(உபகோவில்) - 2
பணி: தாளம்(உபகோவில்) - 5
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருப்பதுடன் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் சம்பந்தபட்ட துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: மாலைகட்டி (உபகோவில்) - 1
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருப்பதுடன் பூஜைகளின் போது சாமிகளை அலங்கரிப்பதற்கும், உற்சவங்களுக்கு தேவையான மாலைகளைத் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்குட்பட்டவராகவும் இந்து மதத்தைத் சேர்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை: www.hrce.tn.gov.in மற்றும் http://www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோவில் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கோ, நேரிலோ அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
இணை ஆணையர், செயல் அலுவர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி - 624 601, திண்டுக்கல் மாவட்டம்.
இணை ஆணையர், செயல் அலுவர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி - 624 601, திண்டுக்கல் மாவட்டம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.1.2025
No comments:
Post a Comment