மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 26 காலிப்பணியிடங்களுக்கு ரூ 18,000 முதல் 34,000 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, December 22, 2024

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 26 காலிப்பணியிடங்களுக்கு ரூ 18,000 முதல் 34,000 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு

 மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 26 காலிப்பணியிடங்களுக்கு ரூ 18,000 முதல் 34,000 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு


மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உள்ள தற்காலிக காலிப்பணியிடங்களுக்கு வரும் 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவித்துள்ளார். நூலகர் மற்றும் புள்ளியியல் நிபுணர், இடைநிலை சுகாதார பணியாளர், பல்நோக்கு ஆஸ்பத்திரி பணியாளர், கதிர்பட பதிவாளர், ஆயுர்வேத டாக்டர், சிகிச்சை உதவியாளர் ஆண், சிகிச்சை உதவியாளர் பெண், செவிலியர் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில், பல் டாக்டர், மாவட்ட தர ஆலோசகர், கணக்கு உதவியாளர், பல் மருத்துவ உதவியாளர், மருந்து வழங்குநர், நூலகர் மற்றும் புள்ளியியல் நிபுணர், இடைநிலை சுகாதார பணியாளர், பல்நோக்கு ஆஸ்பத்திரி பணியாளர், கதிர்பட பதிவாளர், ஆயுர்வேத டாக்டர், சிகிச்சை உதவியாளர் ஆண், சிகிச்சை உதவியாளர் பெண், செவிலியர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.


இப்பணியிடங்களுக்கான தகுதி, ஊதியம் உள்ளிட்ட முழு விவரங்களை



https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2024/12/2024121942.pdf



என்ற இணையதளத்தில் காணலாம்.


விண்ணப்ப படிவத்தை 



https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2024/12/2024121924.pdf



  என்ற இணையத்தளத்தில் காணலாம். 


விருப்பம் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், நம்பர் 5, புதுதெரு, எஸ்.எஸ் மஹால் எதிர்புறம், மயிலாடுதுறை 609001, என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment