இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.21,500 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, December 1, 2024

இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.21,500 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 இந்து சமய அறநிலையத்துறையில்  ரூ.21,500  ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தென்காசி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு முப்பிடாதியம்மன் திருக்கோயில் உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது


தென்காசி மாவட்ட, சங்கரன்கோவில் நகர் மற்றும் வட்டம் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலின் துணைக்கோயிலான சங்கரன்கோயில் அருள்மிகு முப்பிடாதியம்மன் திருக்கோயில் காலியாகவுள்ள பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிடம் 


சமையல் செய்பவர் 1


கல்வித்தகுதி மற்றும் ஊதியம்


சமையல் செய்பவர் பதவிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.


50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


18 வயதுக்கு மேல் 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.


இப்பதவிக்கு ஊதியமாக ரூ.6,900 முதல் ரூ.21,500 வரை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை


இந்து மதத்தினை சார்ந்த ஆண், பெண் இருப்பாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


 விண்ணப்பப் படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் 19.12.2024 தேதி வரை வழங்கப்படும்.


 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதிச் சான்றுகளுடன் இணைத்து, “துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சங்கரநாராயாண சுவாமி திருக்கோயில், சங்கரன்கோயில் நகர் மற்றும் வட்டம், தென்காசி மாவட்ட என்ற முகவரிக்கு ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவஞ்சலில் மட்டும் அனுப்ப வேண்டும். 


கூடுதல் விவரங்களை அலுவலகத்திற்கு நேரில் சென்று அறிந்துகொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள் :


 20.12.2024 மாலை 5.45 மணி வரை

No comments:

Post a Comment