பான் கார்டு 2.0 பெறுவது எப்படி? விண்ணப்பிக்கும் முறை - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, December 17, 2024

பான் கார்டு 2.0 பெறுவது எப்படி? விண்ணப்பிக்கும் முறை

 பான் கார்டு 2.0 பெறுவது எப்படி? விண்ணப்பிக்கும் முறை


ஆதார் போல ஒரு முக்கிய அடையாள ஆவணமாக பான் கார்டை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


அதன்படி, ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள், புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்ற போதிலும், இணையதள வழியாக, க்யூ.ஆர்., கோடு உட்பட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பான் கார்டு 2.0-ஐ பெற்று, பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். புதிய கார்டு வீடு தேடி வரும்.


க்யூ.ஆர்., கோடு எதற்கு?


க்யூ.ஆர்., கோடை ஸ்கேன் செய்தால், ஒருவரது பெயர், பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட விபரங்கள் அனைத்தையும், வருமான வரித் துறை உள்ளிட்ட அரசு துறைகள் திரையில் காண முடியும். இதன் வாயிலாக, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வைத்திருக்க இயலாது. போலி கார்டுகள் களையப்படும்.


பெறுவது எப்படி?


பான் கார்டு வினியோகத்துக்கு, வருமான வரித் துறை அங்கீகாரம் வழங்கியுள்ள புரோட்டீன் மற்றும் யு.டி.ஐ.ஐ.டி.எஸ்.எல்., என்ற இரண்டு அமைப்புகளிடமிருந்து மட்டுமே கார்டுகளை பெற்றிருப்போம். இனியும் இவை இரண்டின் வாயிலாக மட்டுமே பெற முடியும்.


புரோட்டீன்



புரோட்டீன் இணையதளத்தில் பான் கார்டு ரீபிரின்ட் பக்கத்துக்கு செல்ல வேண்டும்



பான் எண், ஆதார் எண், பிறந்த தேதியை பதிவிட்டு, 'டிக்' பகுதியை தேர்வு செய்து, 'சப்மிட்' பகுதியை அழுத்த வேண்டும்



வருமான வரித் துறை தகவல் பக்கத்தில் பதிவாகியுள்ள விபரங்களை சரிபார்க்க வேண்டும்.



 சரியாக இருந்தால், ஓ.டி.பி., பெற பதிவிட வேண்டும். மொபைல் எண், மின்னஞ்சல் ஆகிய வற்றில் ஓ.டி.பி.,யை பெறலாம்



 பெறப்பட்ட ஓ.டி.பி.,யை 10 நிமிடத்துக்குள் பதிவிட்டு, 'வேலிடேட்' என்பதை கிளிக் செய்ய வேண்டும்



அடுத்து, இணையதளம் வாயிலாக 50 ரூபாய் கட்டணம் செலுத்தியதும், அதை உறுதி செய்து ஒப்புகை விபரம் வரும்.


இதை எதிர்கால தேவைக்கு சேமித்து வைக்க வேண்டும்



விண்ணப்பித்த 15 முதல் 20 நாட்களுக்குள், க்யூ.ஆர்., கோடு பதித்த புதிய பான் கார்டு வீடு தேடி தபாலில் வரும்



விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்கு பின், என்.எஸ்.டி.எல்., இணையதளத்தில் ஒப்புகை விபரங்களை பதிவிட்டு, புதிய பான் கார்டை பதிவிறக்கம் செய்தும், அச்சு எடுத்தும் வைத்துக் கொள்ளலாம்.



யு.டி.ஐ.ஐ.டி.எஸ்.எல்.,


யு.டி.ஐ.ஐ.டி.எஸ்.எல்., வாயிலாக பான் கார்டு பெற்றவர்கள், அதன் இணையதளத்துக்கு சென்று புதிய கார்டை பெறலாம்.




ரீபிரின்ட் பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்



பான் எண், பிறந்த தேதி மற்றும் கேப்ச்சா எனப்படும் சங்கேத குறியீட்டை பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும்



இதன்பின், என்.எஸ்.டி.எல்., நடைமுறையை போலவே, கட்டணம் 50 ரூபாயை செலுத்தி, ஓ.டி.பி., பெற்று பதிவு செய்தால், வீடு தேடி புதிய பான் கார்டு வந்து விடும்



மேலும் மின்னஞ்சலிலும் க்யூ.ஆர்., கோடு பதித்த புதிய பான் கார்டு அனுப்பப்படும்.



காலக்கெடு இல்லை



பான் 2.0 கார்டு பெறுவதற்கென காலக்கெடு எதையும் அரசு நிர்ணயிக்கவில்லை. ஏற்கனவே உள்ள 78 கோடி பான் கார்டுகளின் தொழில்நுட்ப மேம்பாட்டை அரசு தானாகவே மேற்கொள்ளும்.



எனவே, புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை.



புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் திருத்தம், அப்டேட் போன்றவை தேவைப்படுவோர், கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். திருத்தம் தேவைப்படாதவர்கள் பழைய பான் கார்டிலேயே தொடரலாம்.

No comments:

Post a Comment