இந்து சமய அறநிலையத் துறையில் ரூ 18,500 முதல் ரூ 58,600 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, December 28, 2024

இந்து சமய அறநிலையத் துறையில் ரூ 18,500 முதல் ரூ 58,600 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு

 இந்து சமய அறநிலையத் துறையில் ரூ 18,500 முதல் ரூ 58,600 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு



தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் கோவை மாவட்டம் பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், மற்றும் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.01.2025 க்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.


இளநிலை உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


சம்பளம்: ரூ. 18,500 – 58,600


சீட்டு விற்பனை எழுத்தர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


சம்பளம்: ரூ. 18,500 – 58,600


பதிவறை எழுத்தர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 15,900 – 50,400


துப்புரவு பணியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 10,000 – 31,500


வயதுத் தகுதி:


 விண்ணப்பதாரர் 01.07.2024 அன்று 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.


தேர்வு செய்யப்படும் முறை: 


இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: 


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://perurpatteeswarar.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.


முகவரி: 


உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம், கோவை மாவட்டம் - 641010


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 03.01.2025


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://perurpatteeswarar.hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment