என்எல்சி நிறுவனத்தில் 167 பணியிடங்களுக்கு ரூ.50,000 - 1,60,000 ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, December 26, 2024

என்எல்சி நிறுவனத்தில் 167 பணியிடங்களுக்கு ரூ.50,000 - 1,60,000 ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

 என்எல்சி நிறுவனத்தில் 167 பணியிடங்களுக்கு ரூ.50,000 - 1,60,000 ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு



நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பட்டதாரி பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பட்டதாரி பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 2025 ஜனவரி 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Graduate Executive Trainee(GET)


மொத்தா காலியிடங்கள்: 167


பாட வாரியான காலியிடங்கள் விவரம்:


1. மெக்கானிக்கல் - 84


2. எலக்ட்ரிக்கல் - 48


3. சிவில் - 25


4. கன்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் - 10


தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் அல்லது அதற்கு இணையான துறைகளில் ஏதாவதொன்றில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் கேட் 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000


வயதுவரம்பு:


 1.12.2024 தேதியின்படி பொதுப்பிரிவினர் 30-க்குள்ளும், ஓபிசி(என்சிஎல்) பிரிவினர் 33-க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35-க்குள்ளும் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


கேட் 2024 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்: 


எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினனர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு ரூ.354, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.854 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:


 15.1.2025


மேலும் விவரங்கள் அறிய 



https://www.nlcindia.in/new_website/careers/Advt.19-2024_Details.pdf



கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment