நாளை (14.12.2024)நடைபெற இருந்த ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, December 13, 2024

நாளை (14.12.2024)நடைபெற இருந்த ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

 நாளை (14.12.2024)நடைபெற இருந்த ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வு எழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்வு செய்யப்படும் 100 மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் 4 ஆண்டுகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும். நடப்பாண்டு, ஊரகத் திறனாய்வு தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது.


ஆனால், தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி, நாளை நடைபெற இருந்த ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment