ஜனவரி 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, December 31, 2024

ஜனவரி 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 ஜனவரி 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் ஜனவரி 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 2025 ஜன.13ம் தேதிஅன்று ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு ஜன.25-ம் தேதி அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.


மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 25ம் தேதி வழக்கம்போல் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 13.01.2025 திங்கள்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment