வங்கியில் 1,267 காலிப்பணியிடங்களுக்கு ரூ.48,480 முதல் ரூ 1,35,020 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு
.பொதுத்துறை நிறுவனமான பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் 1,267 காலிப்பணியிடங்கள் தேசிய அளவில் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொறியியல் படித்தவர்களுக்கு ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன.
வங்கி பணியின் விவரங்கள்
கிராமபுற மற்றும் விவசாய வங்கி பிரிவு, சில்லறை விற்பனை பொறுப்புகள், எம்எஸ்எம்இ வங்கி, தகவல் பாதுகாப்பு, மேனேஜ்மெண்ட், C&IC, நிதி, தகவல் தொடர்பியல், நிறுவன தரவு மேலாண்மை அலுவலகம் ஆகிய பிரிவுகளில் இருக்கும் 1, 267 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
விவசாய மார்க்கெட்டிங் அதிகாரி, மேனேஜர், சீனியர் மேனேஜர், டெக்னிக்கல் அதிகாரி, டெக்னிக்கல் மேனேஜர், டெவலப்பர் உள்ளிட்ட பல பதவிகள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு
இப்பணியிடங்களுக்கு பதவிக்கு ஏற்று வயது வரம்பு மாறுப்படும். பரோடா வங்கி காலிப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 24 வயது முதல் அதிகபடியாக 45 வயது வரை உள்ளது.
வயது வரம்பில் ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.
கல்வித் தகுதி
பரோடா வங்கியில் உள்ள இப்பணியிடங்களுக்கு பதவிக்கு ஏற்ற கல்வித்தகுதி அவசியம், பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, இளங்கலையுடன் டிப்ளமோ, எம்பிஏ, CA/CFA/CMA, BE / B Tech ஆகியவை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முழுமையான கல்வித் தகுதியை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம். மேலும் பதவிக்கு ஏற்ப குறைந்தது 3 ஆண்டுகள் வரை அனுபவம் தேவை.
சம்பள விவரம்
இப்பணியிடங்கள் நிலை 1 முதல் நிலை 5 வரை உள்ளது.
நிலை 1 - ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும்.
நிலை 2 - ரூ. 64,820 - ரூ.93,960 வரை வழங்கப்படும்.
நிலை 3- ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும்.
நிலை 4- ரூ.1,02,300 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
நிலை 5- ரூ.1,20,940 முதல் ரூ.1,35,020 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல்/ நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்
https://www.bankofbaroda.in/career
என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினரு ரூ.100 மட்டும் செலுத்தினால் போதுமானது.
அறிவிப்பை பார்க்க
https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-12/Advertisement-Regular-27-12-2024-26-20.pdf
கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
17.01.2025
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் உள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தகுந்த தரவுகளுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment