டிசம்பர் 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு டிசம்பர் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊர்வலம் டிசம்பர் 11ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது. தொடர்ந்து, மறுநாள் காலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் 12ஆம் தேதி வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 21-ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment