மின் உற்பத்தி நிறுவனத்தில் 118 பணியிடங்களுக்கு மாதம் ரூ.50,000 - 1,60,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
பொதுத்துறை நிறுவனமான தேசிய ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். NH/Rectt./05/2023-24
மொத்த காலியிடங்கள்: 118
பணி: Trainee Officer (HR)
தகுதி:
மனித வள மேலாண்மை அல்லது தொழில்துறை உறவுகள் போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முழுநேர, இரண்டு ஆண்டு முதுகலை பட்டம், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Trainee Officer (Public Relations)
தகுதி:
குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முழுநேர முதுகலை பட்டப்படிப்பு, கம்யூனிகேஷன் பிரிவில் டிப்ளமோ, ஊடகவியல் அல்லது பப்ளிக் ரிலேஷன்ஸ் போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Trainee Officer (Law)
தகுதி:
குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சட்டத்துறையில் மூன்றாண்டு எல்எல்பி அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: Senior Medical Officer (SMO)
தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்து குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
வயதுவரம்பு:
30.12.2024 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் டிசம்பர் 2023,ஜூன் 2024 கேட்,கிளாட் போன்ற ஏதாவதொரு தேர்வுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.nhpcindia.com
என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
30.12.2024
மேலும் விவரங்கள் அறிய
https://www.nhpcindia.com/assests/pzi_public/pdf_link/67552236e03c5.pdf
கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment