இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 110 காலிப்பணியிடங்களுக்கு 50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு...! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, December 7, 2024

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 110 காலிப்பணியிடங்களுக்கு 50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு...!

 இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 110 காலிப்பணியிடங்களுக்கு 50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு...!


ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


 தேசிய அளவில் உள்ள 110 உதவி மேலாளர் பணியிடங்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


 இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 4-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.


மத்திய அரசின் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் (General Insurance Corporation of India) 110 உதவி மேலாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் தேசிய அளவிலும், வெளிநாடுகளில் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.


பணியின் விவரங்கள்


பதவிக்கான பிரிவுகள் மற்றும் காலிப்பணியிடங்கள்


பொது 18


சட்டம் 9


எச்ஆர் 6


பொறியியல் 5


ஐடி 22


ஆக்சுவரி 10


இன்சூரன்ஸ் 20


மெடிக்கல் 2


நிதி 18


மொத்தம் 110


இதில் பொதுப் பிரிவில் 43 இடங்கள், எஸ்சி பிரிவில் 15 இடங்கள், எஸ்டி பிரிவில் 10 இடங்கள், ஒபிசி பிரிவில் 34 இடங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 6 இடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 இடங்கள் என மொத்தம் 108 இடங்களும், மருத்துவ பிரிவில் எஸ்சி - 1, பொருளாதாரத்தில் பின்தங்கியவர் - 2 நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு


ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு 01.11.2024 தேதியின்படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 21 வயது வரை இருக்கலாம்.


 அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம்.


 02.11.1994 தேதிக்கு முன்னர் பிறந்திருக்கக்கூடாது. 01.11. 2003 தேதிக்கு பின்னர் பிறந்திருக்கக்கூடாது.


வயது வரம்பில் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.


கல்வித்தகுதி


இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை முடித்திருக்க வேண்டும். பொது பிரிவு, சட்டம், எச்ஆர், பொறியியல், ஐடி ஆகிய பிரிவுகளுக்கு முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். நிதி பிரிவிற்கு முதுகலை, MBA/CFA / CA / CMA ஆகியவை முடித்திருக்க வேண்டும்.


பொது பிரிவில் நிரப்பப்படும் இடங்களுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் மற்றும் எம்பிஏ பட்டத்திற்கு முன்னுரிமை.


சம்பளம் விவரம்


இப்பதவிகளுக்கான அடிப்படை சம்பளம் ரூ.50,925 ஆகும்.


 தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படும். 


DA, HRA, CCA ஆகியவை கூடுதலாக வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை


இப்பணியிடங்களுக்கு மருத்துவம் தவிர இதர பிரிவுகளில் ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


 முழுமையாக 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.


மருத்துவ பிரிவு பணியிடங்கள் 2 கட்ட நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்களில் https://ibpsonline.ibps.in/gicionov24/ என்ற இணைப்பின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


 இதற்கான அறிவிப்பை https://www.gicre.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். 


தேர்வு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


 சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்


19.12.2024


ஆன்லைன் தேர்வு தேதி 05.01.2025


ஹால் டிக்கெட் தேர்விற்கு 7 நாட்கள் முன்பு வெளியிடப்படும்.


ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள 110 உதவி மேலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் உடனே ஆன்லைன் வழியாக தரவுகள் அளித்து விண்ணப்பிக்கலாம்.


 பெண்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment