இன்று (03.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Monday, December 2, 2024

இன்று (03.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 இன்று (03.12.2024)  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


கடலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. பெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது.


இந்த பெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.


குறிப்பாக, கடலூரில் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடலூரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.


இந்நிலையில், பெஞ்சல் புயலால் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மழைநீர் வடியா நிலையில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


மீட்புப் பணிகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதாலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும் விடுமுறை அறிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (03.12.2024) விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

மழையின் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று(03.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று(03.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர்-3) விடுமுறை அறிவிப்பு


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச. 03) விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 3) விடுமுறை அறிவிப்பு


கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.


கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ( டிசம்பர் 3 ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த தேவாலயத்தில் ஆண்டு திருவிழா நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை கொண்டாடப்படும்.


அந்தவகையில் உலகில் புனித சவேரியாருக்கென்று முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என வரலாற்றுச் சிறப்புகளுடன் உள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலய விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இன்று (டிசம்பர் 3ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறைக்கு ஈடு செய்யும் வகையில் டிசம்பர் 14-தேதியன்று  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment