பட்டப்படிப்பு சான்றிதழ்கள் குறித்த உண்மை தன்மை சான்று:பல்கலை மானிய குழு பிறப்பித்த உத்தரவு - Minnalseithi

Latest

Search This Blog

Monday, November 4, 2024

பட்டப்படிப்பு சான்றிதழ்கள் குறித்த உண்மை தன்மை சான்று:பல்கலை மானிய குழு பிறப்பித்த உத்தரவு

 பட்டப்படிப்பு சான்றிதழ்கள் குறித்த உண்மை தன்மை சான்று:பல்கலை மானிய குழு பிறப்பித்த உத்தரவு


'பட்டப்படிப்பு சான்றிதழ்கள் குறித்த உண்மை தன்மை சான்று வழங்க, பல்கலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது' என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

பட்டப்படிப்பு முடித்தவர்கள், அரசு பணிகளில் நியமிக்கப்படும் போது, அவர்களின் கல்வி தகுதிக்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அக்கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து அறிய அரசு ஏற்பாடு செய்யும்.


இதற்காக, அச்சான்றை வழங்கிய பல்கலைகள், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அதை அனுப்பி, அதன் உண்மை தன்மை குறித்த அறிக்கை பெறுவர். இதற்காக, 1,000 ரூபாய் முதல் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.


இந்நிலையில், உண்மை தன்மை சான்று வழங்க பல்கலைகள், கல்வி நிறுவனங்கள் கட்டணம் பெறக்கூடாது என, யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோசி உத்தரவிட்டுள்ளார்.


அதில், 'உயர் கல்வி நிறுவனங்கள் விருப்பப்படி, 'அசிஸ்டென்ட் செக் ஷன் ஆபீசர், ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' பணிகளுக்கு, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.


இந்நடவடிக்கையை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment