இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, November 29, 2024

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு

 இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு


இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு அகத்தீஸ்வர் சுவாமி திருக்கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவர்களுக்கு சுயம்பாகி, பகல் காவலர், திருவலகு உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை, வில்லிவாக்கம் அருள்மிகு அகத்தீஸ்வர் சுவாமி திருக்கோயிலில் (Chennai Villivakkam Arulmigu Agatheeswara Swamy Temple) உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு இந்து மதத்தினை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியின் விவரங்கள்


பதவியின் பெயர்

சுயம்பாகி 1

மின்பணியாளர் 1

பகல்காவலர் 1

திருவலகு 1


வயது வரம்பு


இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு அகத்தீஸ்வர் சுவாமி திருக்கோயிலில் உள்ள இப்பணியிடங்களுக்கு 01.07.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி


சுயம்பாகி பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


 திருக்கோயில் பழக்க வழக்கங்களின் படி, நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.


 திருக்கோயில் பூஜை மற்றும் திருவிழக்கள் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.


மின்பணியாளர் பதவிக்கு அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் மின்சார வாரிய தொழில்துறை பயிற்சி (ITI) பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். 


மின்சார உரிம வாரியத்தால் வழங்கப்பட்ட “B" சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.


பகல்காவலர் பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


திருவலகு பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை


இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு அகத்தீஸ்வர் திருக்கோயிலில் உள்ள பணியிடங்களுக்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முக தேர்விற்கு அறிவிப்பு அனுப்பப்படும்.


 நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதார்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டது.


 நேர்முக தேர்வானது அதற்குண்டான குழுவினரின் முடிவுக்கும் இத்துறை ஆணையரின் அங்கீகாரத்திற்கும் உட்பட்டதாகும்.


 திருக்கோயில் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் அல்லது அலுவலகத்திற்கு நேரில் சென்றும் பெற்றுக் கொள்ளலாம்.

 விண்ணப்பப்படிவத்துடன் தகுந்த ஆவணங்களின் சான்றிதழ்களை சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


கல்வித்தகுதி சான்றிதழ் நகல்கள்


சாதிச்சான்றுதல் நகல் (வட்டாட்சியரால் வழங்கப்பட்டது)


குடும்ப அடையாள அட்டை நகல்


முன்னுரிமைக்கான சான்றிதழ் நகல்


ஆதார அட்டை நகல்


வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல்


சுயவிலாசமிட்ட ரூ.25-க்கான தபால் தலையுடன் கூடிய உறை


ஊதியம்

சுயம்பாகி பதவிக்கு ரூ. 13,200 முதல் ரூ.41,800 வரையும், மின்பணியாளர் பதவிக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரையும், பகல்காவலர் பதவிக்கு ரூ.11,600 முதல் ரூ.36,800 வரையும், திருவலகு பதவிக்கு ரூ.10,000 முதல் ரூ.31,500 வரையும் ஊதியம் வழங்கப்படும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்


09.12.2024


திருக்கோயில் மூலம் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். செயல் அலுவலர் அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை 49 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பணியிட விவரங்களுக்குக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, நிபந்தனைகள் மற்றும் இதரவிவரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் வந்து கேட்டு விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தினை சார்ந்த தகுதியுள்ளவர்கள் அருள்மிகு அகத்தீஸ்வர் திருக்கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment