வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நிரப்பப்பட உள்ள 170 முதுநிலை வாடிக்கையாளர் சேவை அலுவலர் பணியிடங்களுக்கு முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Customer Service Executive
காலியிடங்கள்: 170
சம்பளம்: மாதம் ரூ.32,000
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பனிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.9.2024 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடைபெறும்.
தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 2024
நேர்முகத் தேர்வு ஜனவரி 2025 இல் நடைபெறும். தேர்வு நடைபெறும் சரியான நாள், இடம் குறித்த விவரங்கள் அழைப்பு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். அழைப்பு கடிதத்தை வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tmbnet.in/tmb என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.11.2024
மேலும் விவரங்கள் அறிய
https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_SCSE_IBP.pdf
கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment